ரேஷன் கடைகளில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! Government Ration Shop News in Tamil!
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில், தனியார் சந்தைகளை விட குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யப்பட்டும் வருவதுடன். நியாய விலைக்கடைகள் மூலம் அரசின் இலவச பொருட்களும், நிதியுதவிகளை ஏராளம். இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அது குறைத்த தகவல்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
நியாய விலை குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால், வட்ட வழங்கல் அலுவலரிடம் சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய பொதுமக்களின் சிரமத்தையும், பொதுமக்களின் குறைகளையும் குறைக்கும் வகையில் மாதம் இருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களின் குறைகளும் உடனடியாக தீர்க்கப்படுகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ATM கார்ட் இருந்தால் 30 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் தெரியுமா?
சில சமயங்களில் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்க வரும் சாமானியர்கள் சில இடையூறுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையை மாற்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து மதுரையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், நியாய விலைக் கடைகளில் அரசு வழங்கும் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், நியாய விலைக் கடைகளில் நியாய விலை பொருட்களை மட்டுமே விற்பனை செய்யவும் மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எக்காரணம் கொண்டும் இலக்கு அல்லது நியாயமான விலை இல்லாத பொருட்களை விநியோகிக்க வேண்டாம் என்று கூறுகிறோம். மீண்டும் இதை உங்கள் முன் தெளிவுபடுத்துகிறேன் என்றார்.
முன்னதாக, கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுதானிய ஆண்டு விழாவையொட்டி கூட்டுறவு கடன் சங்கங்களை கிராமப்புற சந்தைகளாகவும், பல்நோக்கு சேவை மையங்களாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு பேருந்தில் பயணம் செய்பவரா நீங்கள்..! உங்களுக்கு ஒரு கசப்பான செய்தி..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |