இனி நீங்க வீட்ல கரண்ட் இல்லைனு கவலை பட வேண்டாம்..! குட் நியூஸ் வந்துடுச்சு தெரியுமா..!

green energy budget 2023 tamil nadu in tamil

மின்சாரம்

மின்சாரம் என்பது இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவருடைய வீட்டிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் ஒரு வீட்டில் கூட மின்சாரம் இல்லாமல் இருப்பது இல்லை. அப்படி கொஞ்சம் நேரம் வீட்டில் மின்சாரம் இல்லை என்றாலும் கூட உடனே மின்வாரியத்திற்கு கால் பண்ணி ஏன் என்னாச்சு எதனால் கரண்ட் இல்லை என்று நாம் கேட்போம். அதுவும் குறிப்பாக வெயில் காலம் வந்துவிட்டால் அடிக்கடி மின்சார பிரச்சனை வரும். இத்தகைய மின்சார பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா.. அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்.. 

மின்சாரம் பிரச்சனை:

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இப்போது பெரும்பாலான பகுதிகளில் மின்சார பிரச்சனை இருப்பதால் அதற்கு ஒரு தீர்வினை கொண்டு வரும் வகையில் அறிவிப்பு வந்துள்ளது.

அது என்னவென்றால் தமிழ்நாட்டில் 33,000 மெகாவாட் மின்சாரம் 2030-ஆம் ஆண்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதன் மூலம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் 20 GW சூரிய ஆற்றல் திறனும், 30 GW கடல் பரப்பிற்கான காற்றாலைகள் திறனும் மற்றும் 70 GW நிலப்பரப்பிற்கான காற்றாலைகள் திறனும் அமைத்து அதன் மூலம் தமிழ்நாட்டினை பசுமை மிக்க நாடக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பட்ஜெட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4,100 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கான பணிகள் விரைவில் முடிந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் மின்சார பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் பட்ஜெட்டி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாற போகுதாம் மத்திய அரசு அறிவிப்பு…! தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க… 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil