HDFC Bank Senior Citizen FD in Tamil
வணக்கம் நண்பர்களே..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணத்தேவை என்பது ஏற்படும். அப்படி பணத்தேவை ஏற்படும் போது நாம் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கி கொள்வோம். அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் நம்பி செல்வது வங்கியை மட்டும் தான். அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதுபோல நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதால் பிற்காலத்தில் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதை தொடர்ந்து HDFC வங்கியானது மூத்தகுடிமக்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன திட்டம் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கி வழங்கும் சூப்பர் திட்டம்..!
இன்றைய நிலையில் மக்கள் பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வட்டியை பெற பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் தேர்வு செய்கிறார்கள். சரி உங்களுக்கு பிக்சட் டெபாசிட் என்றால் என்ன என்று தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்
இதனை தொடர்ந்து HDFC வங்கியானது மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை நீடிப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனியர் சிட்டிசன் கேர் FD -யானது 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு முதலீடு செய்யும் தொகையில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த திட்டமானது 2020 -ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கு 7.70% மற்றும் 7.75% வட்டி விகிதத்தை வழங்கும் 35 மற்றும் 55 மாத காலத்திற்கு 2 ஸ்பெஷல் எடிஷன் FD திட்டங்களை HDFC வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதுபோல 35 மாத திட்டத்திற்கு 7.70% வட்டியும், 55 மாத FD திட்டத்திற்கு 7.75% வட்டியும் வழங்கப்படுகிறது.
HDFC வங்கியின் இந்த ஸ்பெஷல் FD -யின் கீழ் பணத்தை முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் கூடுதலாக 0.25% வட்டி விகிதத்தை பெறுகிறார்கள் என்று கூறியுள்ளது.
எனவே HDFC வங்கியின் இந்த ஸ்பெஷல் Senior Citizen Care FD scheme ஆனது வரும் ஜூலை 7, 2023 வரை மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் என வங்கியின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்த சிறப்பு திட்டமானது 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRIs) பொருந்தாது என்றும் வங்கி கூறியுள்ளது.
55 மாதத்தில் Rs.4,22,201/- வட்டி தரும் சேமிப்பு திட்டம் |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |