பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
வணக்கம் பிரண்ட்ஸ்..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் பணத்தேவை என்பது ஏற்படும். அப்போது நாம் பணத்திற்கு கண்டிப்பாக கஷ்டப்படுவோம். அந்த நேரத்தில் வட்டிக்காக கடன் வாங்குவோம். இந்த காரணத்திற்காக தான் பலரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள். அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதால் எந்தவொரு பயனும் இல்லை. அதை ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அது நாம் கஷ்டப்படும் நேரத்தில் நமக்கு உதவியாக இருக்கும். அப்படி மக்கள் அதிகமாக முதலீடு செய்வது பிக்சட் டெபாசிட்டில் தான். சரி பிக்சட் டெபாசிட்டில் வங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் நிறுவனம் எது என்று தெரியுமா..? அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பிக்சட் டெபாசிட்டுக்கு எதில் வட்டி அதிகம்:
பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி எதில் அதிகமாக வழங்கப்படுகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் பிக்சட் டெபாசிட் என்றால் என்ன என்று தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Fixed Deposit பற்றிய தகவல்கள்
பிக்சட் டெபாசிட் என்றால் என்ன என்று மேல் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். பொதுவாக சேமிப்பு நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் அனைத்திலும் சேமிப்பின் அடிப்படை என்று பார்த்தால் அதில் ஃபிக்ஸட் டெபாசிட் கண்டிப்பாக இருக்கும்.
அப்படி Fixed Deposit -க்கு வங்கிகள் வழங்கும் வட்டி ஒரே மாதிரியாக தான் இருக்கின்றன. ஆனால் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி சற்று கூடுதலாக உள்ளது என்று கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு வங்கிகளில் Fixed Deposit -க்களுக்கு தற்போது வழங்கப்படும் வட்டி ஆண்டுக்கு 6.5% முதல் 7% வரை உள்ளது. ஆனால் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் Fixed Deposit -க்கு 8 சதவிதம் வரை வட்டி வழங்குகின்றன.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு |
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
Fixed Deposit செய்யும் போது, அதற்கான கால அளவுகள், அதற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது அதேபோல எல்லா இடங்களிலும் ஓரே வட்டி தான் வழங்கப்படுகிறதா என்று கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.
காரணம் அனைத்து நிறுவனமும் எல்லா கால அளவுக்கும் ஒரே மாதிரியான வட்டியை கொடுப்பதில்லை.
அதுபோல Fixed Deposit –க்கு 5 ஆண்டு காலத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருவான வரி விலக்கு உண்டு. அதாவது அதிகபட்சம் 1.5 லட்சத்திற்கு வரி விலக்கு உண்டு. இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
பிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |