வீட்டுக் கடனுக்கான சிறப்பு தள்ளுபடியினை வழங்கும் SBI பேங்க்..! இந்த நியூஸ் தெரியுமா..?

Advertisement

Home Loan Discount for SBI Bank  

பொதுவாக நாம் அனைவரிடமும் பண பற்றாக்குறைவு ஏற்படும் போது கண்டிப்பாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஆனது ஏற்படுகிறது. அவ்வாறு கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கடனை வாங்குகிறார்கள். அதாவது வீட்டுக் கடன், தனிநபர் கடன், நகைக்கடன் மற்றும் கார் கடன் கடன் வாங்குகிறார்கள். அதேபோல் இத்தகைய கடனை ஒவ்வொரு வங்கியிலும் பெறுகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் SBI வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான ஒரு சிறப்பான தள்ளுபடியினை SBI பேங்க் ஆனது வழங்கி உள்ளது. அதனால் அது என்ன தள்ளுபடி என்றும், எவ்வளவு வரை தள்ளுபடி என்றும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

1000 ரூபா ஏறிடுச்சான்னு SMS வரவில்லை என்றால் இப்படி தெரிஞ்சுக்கோங்க..

வீட்டு கடன் சிறப்பு தள்ளுபடி:

வீட்டு கடன் சிறப்பு தள்ளுபடி

SBI பேங்க் வீட்டுக் கடனுக்கான சிறப்பு தள்ளுபடியினை பண்டிகை காலத்திற்காக தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த வங்கி 65 அடிப்படை சதவிகித புள்ளியில் கடன் கிடைக்கும் என்றும், இதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இந்த கடன் தள்ளுபடி சலுகை ஆனது உங்களின் சிபில் ஸ்கொரினை பொறுத்து மட்டுமே அமையும் என்பதையும் கூறியுள்ளது. அந்த வகையில் சராசரியாக சிபில் ஸ்கோர் ஆனது 300-க்கு மேலேயும், 900-திற்கு கீழேயும் இருக்கும்.

எனவே சிபில் மதிப்பெண் உங்களுக்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்தே உங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் SBI பேங்க் கூறியுள்ளது.

சிபில் ஸ்கோர் அடிப்படையிலான கடன் தள்ளுபடி:

750-800 CIBIL Score:

இத்தகைய அமைப்பில் ஒருவருக்கு சிபில் ஸ்கோர் ஆனது இருந்தால் அவர்களுக்கு 55 bps சலுகையுடன் 8.60% சதவீத வீட்டுக் கடன் வட்டி சலுகை காலத்தில் அளிப்படுகிறது.

700-749 CIBIL Score:

SBI வங்கி இத்தகைய அடிப்படையிலான மதிப்பெண்கள் வைத்து இருப்பவர்களுக்கு 65 bps தள்ளுபடியினையும் 8.7% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.

550-599 CIBIL Score:

உங்களுக்கு 550 முதல் 599 வரை மட்டும் சிபில் மதிப்பெண் இருந்தால் அதற்கான எந்த தள்ளுபடியும் வழங்கப்பட மாட்டாது. மேலும் வட்டி விகிதம் மட்டும் 8.7% உண்டு.

151-200 CIBIL Score:

அதேபோல் 65 bps சலுகை கால தள்ளுபடியாகவும், 8.7% கடனுக்கான வட்டி விகிதமாகவும் அளிக்கிறது.

101-150 CIBIL Score:

101-150 என்பதற்கு கீழ் ஒருவரின் சிபில் மதிப்பெண் இருந்தால் அவர்களுக்கு எந்த விதமான தள்ளுபடியும் கிடையாது. மேலும் வட்டி விகிதமும் 9.45% அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள சலுகைகள் இல்லாமல் 700 என்ற சிபில் மதிப்பெண்ணை வைத்து இருக்கும் ஒரு நபர் வீட்டு கடனை மறு விற்பனை செய்தாலோ அல்லது கையப்படுத்தினாலோ bps தள்ளுபடியையும் பெறலாம்.

அதேபோல் பில்டர் டை-அப் திட்டங்களுக்கு, மேலே கூறப்பட்ட கட்டணங்களில் 5 bps கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.

1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய குட் நியூஸ்  யாரெல்லாம் கடன் வாங்கி இருக்கீங்க 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement