How Many Days Leave for Diwali in Tamil Nadu
பொதுவாக பண்டிகை காலம் என்றாலே சிறியவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஏனென்றால் பண்டிகை காலத்தில் என்ன தான் புது புது ஆடைகள் கிடைத்தாலும் கூட பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும் என்பதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக அமையும. அதிலும் குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஏனென்றால் பலரும் படிக்க, வேலைக்காக என சொந்த ஊரை விட்டு வெளி ஊரில் வந்து தங்கி இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பண்டிகை காலத்தில் தான் சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்கியாக விடுமுறை கழித்து வரலாம் என்பது ஒரு நடைமுறையாக இருக்கும். அந்த வகையில் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. ஆகவே அதனை பற்றிய விரிவான செய்தி தொகுப்பினை நமது பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை:
2023-ஆம் ஆண்டிற்கான தீபாவளி திருநாள் ஆனது நவம்பர் மாதம் 12-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அந்த வகையில் தீபாவளியை மகிழ்ச்சியாகவும், குடும்பத்தினருடனும் கொண்டாட வேண்டும் என்று வெளி ஊரில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
இவ்வாறு வரும் பட்சத்தில் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் பலரும் ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே ஊருக்கு சென்று விட்டு தீபாவளி மறுநாள் வழக்கம் போல் ஊருக்கு திரும்புவார்கள்.
ஆனால் இந்த வருட தீபாவளி ஆனது ஞாயிற்றுக்கிழமை என்று வரும் காரணத்தினால் தீபாவளிக்கு என்று எதுவும் விடுமுறை இருக்காது. அதேபோல் தீபாவளி மறுநாள் திங்கட்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் ஊருக்கு அன்று இரவே செல்ல வேண்டி இருக்கும்.
இத்தகைய நிலையினால் போக்குவரத்து நெரிசல் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்பது அனைவரும் உணரக்கூடிய ஒன்று. ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசானது தீபாவளிக்கு மறுநாள் அதாவது 13.11.2023 அன்று பொது விடுமுறை என்றும், இந்த நாளை ஈடு செய்ய 18.11.2023 அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே தீபாவளிக்கு என்று பார்த்தால் மொத்தமாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ரூ. 22 மட்டும் நீங்கள் செலவு பண்ணி ரீச்சார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கான பலன் கிடைக்கும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |