ஆதாரில் பிழைகளை சரி செய்வதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க

how many times we can change details in aadhar card in tamil

ஆதார் அட்டை திருத்தம்

மனிதர்களின் வாழ்க்கையில் ஆதார் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆதார் வெறும் அட்டையாக இல்லாமல் மனிதனின் அடையாளமாக இருக்கிறது. எங்கு சென்றாலும் ஆதாரின் தேவை அதிகமாக இருக்கிறது. அரசின் திட்டங்களை நாம் பயன் பெற வேண்டுமென்றால் ஆதார் வேண்டும். இதில் பிழை இருக்கும் போது ஈசியாக மாற்று விடுவார்கள். மேலும் ஒருவர் பணியில் வெளியூர் Transfer செய்தால் முகவரியை மாற்ற வேண்டியிருக்கும். ஆதாரில் எதனை முறை வேண்டுமானாலும் பிழைகளை சரி செய்து கொள்ள முடியும் என்று நினைத்தால் அது தவறானது. ஆதாரில் பிழைகளை சரி செய்வதற்கு லிமிட் இருக்கிறது. அதனை பற்றி இந்த பத்வின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

ரேஷன் கடையில் பணிபுரிபவர்களுக்கு இந்த நியூஸ் தெரியாதா..! அப்போ உடனே அந்த குட் நியூஸை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

ஆதாரில் இருக்கும் தகவல்களை எத்தனை முறை மாற்றி கொள்ளலாம்:

ஆதார் அட்டை இல்லாவிட்டால் பல அரசுத் திட்டங்களில் இருந்து வரும் சலுகைகளை நாம் பயன் பெற முடியாது.  ஆதார் அட்டையின் அப்டேட் செய்ய வேண்டியது அவசியமானது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும். ஆனால் அதற்காக  ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் தவறுகளை திருத்தி கொள்ளலாம் என்று  நினைக்க கூடாது.  ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது அப்டேட் செய்வதற்கு யுஐடிஏஐ ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது, அந்த வரம்பை மீறி ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய முடியாது.

பெயரை எத்தனை முறை திருத்தும் செய்யலாம்:

ஆதாரில் இருக்கும் பெயர் தவறாக இருக்கலாம், இல்லையென்றால் பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெயர்களில் மாற்றத்தை ஏற்படுத்த கூடும். அதனால் ஆதாரில் இரண்டு முறை மட்டுமே பெயரை மற்றம் செய்ய முடியும்.

முகவரியை எத்தனை முறை மாற்றம் செய்யலாம்:

முகவரியை ஒரு முறை மட்டும் தான் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

பாலினத்தை ஒரே ஒரு முறை மட்டும் தான் மாற்றம் செய்து கொள்ள முடியும்.

ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil