சமையல் கேஸ் வாட்சப் மூலம் புக் செய்வது
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் வீட்டிலையும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்த கேஸ் சிலிண்டரானது அவரவர் பயன்படுத்தும் விதத்தை வைத்து மாத கணக்கில் வருகிறது. அப்படி நாம் ஒரு சிலிண்டரை பயன்படுத்தி விட்டு அடுத்த சிலிண்டர் வேண்டுமென்றால் நாம் புக் செய்ய வேண்டும். மொபைலில் புக் செய்வது பலருக்கும் தெரிவதில்லை. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அதனை கேஸ் புக் செய்வதையும் எளிமையாக்கின்றனர். அதனால் அந்த வழி என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய வழி:
சமையல் கேஸ் சிலிண்டரை புக் செய்வதற்கு போன் கால், SMS, ஆன்லைன்,மொபைல் ஆப் போன்ற பல் முறைகளில் புக் செய்து கொள்ளலாம். ஆனாலும் இது போல் புக் செய்வது தெரியவில்லை.
நீங்கள் புக் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் உங்களுடைய போன் நம்பரை இணைத்திருக்க வேண்டும். அப்போது தான் புக்கிங் செய்ய முடியும்.
Indane, Bharat Petroleum, HP Gas வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை தங்களின் வாட்ஸ் மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்..
சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது எவ்வளவு தெரியுமா.?
எப்படி புக் செய்வது:
Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற நம்பரை செல்போனில் பதிவு செய்து, சேமித்து கொள்ள வேண்டும். பிறகு, வாட்ஸ்அப்பில் “Book” என்று டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த மெசேஜிற்கு “தங்களின் ஆர்டர் பெறப்பட்டது” என்ற பதில் வரும்.. மேலும், சிலிண்டர் டெலிவரி செய்யும் தேதியும், அந்த மெசேஜ் மூலமே கிடைத்துவிடும்.
நீங்கள் HP கேஸ் கஸ்டமர்களாக இருந்தால், 92222 01122 என்ற நம்பர் மூலம் சிலிண்டரை புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த எண்ணிற்கும் வாட்ஸ்அப்பில் “Book” அல்லது “Hi” என்று மெசேஜ் அனுப்பினாலே போதும்.. உங்களுடைய சிலிண்டர் புக் ஆகிவிடும்.
நீங்கள் Bharat Petroleum சிலிண்டர் கஸ்டமர்களாக இருந்தால், 1800224344 என்ற நம்பருக்கு “Hi” மெசேஜ் அணுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் ஆகிவிடும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |