How to Check Magalir Urimai Thogai Rs.1000 Balance in Mobile Phone
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் தொகையினை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை முதல்வர் அண்ணா பிறந்த நாளான இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. ஒரே நாளுக்குள் 1 கோடிக்கும் அதிகமான பண பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நேற்றே பணத்தை வங்கி கணக்குகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது. அதனால் உங்கள் கணக்கில் 1000 ரூபா செலுத்தப்பட்டது என்பதை கண்டறிவது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.
1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது எனபதை கண்டறிவது எப்படி.?
நீங்கள் 1000 ரூபாய் உரிமை தொகையை விண்ணப்பிக்கும் போது எந்த நம்பரை கொடுத்தீர்களா அந்த எண்ணுக்கு மெசேஜ் ஆக வரும். மெசேஜ் வராதவர்கள் நாளை மாலை வரை காத்திருக்கலாம். மெசேஜ் வரவில்லை என்றாலும் உங்கள் கணக்கில் 1000 செலுத்தப்பட்டது என்பதை ஈசியான வழியில் உறுதி செய்வதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
நீங்கள் எந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருந்தாலும் அதில் நீங்கள் பேலன்சை தெரிந்து கொள்வதற்கு அந்தந்த வங்கியில் உள்ள நம்பருக்கு Missed call கொடுத்தால் உங்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
வங்கியின் பெயர் | தொலைபேசி நம்பர் |
இந்தியன் வங்கி | 092895 92895 |
ஐசிஐசிஐ | 022- 30256767 |
கனரா வங்கி | 092892 92892 |
ஹெச்டிஎப்சி | 1800-270-3333 |
பேங்க் ஆப் பரோடா | 08468001111 |
பேங்க் ஆப் இந்தியா | 09266135135 |
செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா | 09555244442, 09555144441 |
இந்தியன் ஓவர் சீஸ் | 04442220004 |
ஐடிபிஐ | 18002094324, 1800221070 |
யூனியன் பேங்க் ஆப் இந்தியா | 09223008586 |
பஞ்சாப் அண்ட் சிந்த் | 7039035156 |
யூசிஓ | 1800 103 0123 |
கோட்டக் மகேந்திரா வங்கி | 18002740110 |
எஸ் வங்கி | 09223920000, 09223921111 |
கர்நாடக வங்கி | 18004251445, 18004251446 |
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவித்த குட் நியூஸ்..! என்னனு தெரியாத
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |