ரேஷன் கார்டு தொலைந்து போனால்? அடுத்த 5 நிமிடத்தில் வாங்கிடலாம்!!! எப்படி தெரியுமா?

How to Get Duplicate Ration Card Online in Tamil

ரேஷன் கார்டு தொலைந்து போனால்? அடுத்த 5 நிமிடத்தில் வாங்கிடலாம்!!! எப்படி தெரியுமா?

How to Get Duplicate Ration Card Online in Tamil – தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் குடும்ப அட்டை மூலமாக நியாயவிலை கடையான ரேஷன் கடையில் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றன. இதனை ஸ்மார்ட் கார்டு என்றும் அழைப்பார்கள். இந்த ஸ்மார்டு கார்டினை பயனர்கள் சில நேரத்தில் எதிர்பாராத விதத்தில் தொலைத்துவிட்டார் என்றால் அதன் பிறகு அந்த குடும்ப அடையான ஸ்மார்ட் கார்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கு அதிக காசு செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். இதனை தவிர்க்க இதற்கான வசதியை ஆன்லைனிலே எளிதில் பெற தமிழக அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தொலைத்த ரேஷன் கார்டை மீண்டும் பெறுவதற்கான எளிய வழி – How to Get Duplicate Ration Card Online in Tamil:

ஸ்மார்ட் கார்டை தொலைத்தவர்கள் தமிழக உணவு வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.

இதில் பயனாளர் நுழைவில் User ID-ஐ உள்ளிட்டு ஸ்மார்ட் கார்டில் குறிப்பிட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அதனை இணையதளத்தில் உள்ளிட்ட வேண்டும்.

இதன் பிறகு மற்றொரு பக்கத்தில் Profile ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஸ்மார்ட் கார்டின் பதிவிறக்கம் பட்டனை கிளிக் வேண்டும்.

இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலை கொண்டு ரேஷன் கடைகளில் வழக்கம் போல் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்த நகலை உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து சில மாதங்களில் புதிய ரேஷன் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காவல்துறை எச்சரிக்கை.! Gpay பயன்படுத்துகிறவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி ஆகாதீங்க..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil