தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பு..! How to Get Duplicate Smart Ration Card in Tamilnadu
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ஒரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது என்ன தகவல் என்று இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம். அதாவது நமது குடும்ப அட்டை தொலைந்துவிட்டது என்றாலோ, அல்லது சேதம் அடைந்திருந்தாலோ, அல்லது நமது முகவரியை மாற்றி இருந்தாலோ நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு நகல் குடும்ப அட்டை கிடைக்கும். முன்பு ரேஷன் அட்டை தொலைந்து விட்டது என்றால் நகல் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து இருந்திருப்பார்கள் இருப்பினும் அது அவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக கைக்கு கிடைப்பது இல்லை, அப்படியே நாம் அப்ளை செய்திருந்தாலும் 6 மாதம் ஒரு வருடம் கழித்து நேரடியாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று 25 ரூபாய் செலுத்தி தான் நாம் வாங்க வேண்டியதாக இருக்கும். இவற்றில் நிறைய சிக்கல்கள் இருந்து, இதன் காரணத்தினால் தமிழக அரசு சார்பில் இருந்து ஒரு சில அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். அதாவது உங்களுடைய நகல் ரேஷன் கார்டு உங்களுடிய வீட்டிற்கே தேடி வரக்கூடிய ஒரு வசதியை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
அதனையொட்டி ஒரு செய்து வெளியிட்டுள்ளனர், அதாவது டூப்பிளிகேட் ரேஷன் கார்டு அஞ்சல் மூலமாக அனுப்பப்படுவதற்க்கான MOU கையொப்பம் ஆகப்பட்டுள்ளது அது குறித்த தகவலை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் முக்கியம் இதை தெரிந்துகொள்ளுங்கள்…!
அறிவிப்பு:
இந்த செய்தி வெளியிடப்பட்ட எண் 650, அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 05.04.2023 ஆகும். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட/ தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்கு பதிலாக நகல் மின்னணு அட்டையை குடும்ப அட்டைதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பெரும் முறை கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இணைய வழியில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையை செலுத்தவும் மீண்டும் திருத்தப்பட்ட அட்டையை பெறவும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆக தற்போது அந்த முறையை மாற்றி குடும்ப அட்டைதாரர்கள் நகல் குடும்ப அட்டை பெற மண்டலம்/ வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே பணம் எழுத்திடவும், அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே அட்டைக்கான கட்டணம் ரூ.20/- மற்றும் அஞ்சல் சேவை கட்டணம் ரூ.25/- ஆக மொத்தம் 45/- ரூபாயை இணையம் வழியில் QR Code அல்லது Net Banking வழியாக செலுத்தி அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையை அஞ்சல் வழியில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆக விண்ணப்பதாரர்கள் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடியே உங்களது நகல் ரேஷன் அட்டையை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி..! இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |