ரேஷன் கார்டிற்கு வங்கி கணக்கு இனி கட்டாயம் | வங்கி கணக்குடன் ரேஷன் கார்டை இணைப்பது எப்படி? | How to Link Bank Account With Ration Card in Tamil
தமிழக அரசு அடுத்த புதிய அறிவிப்பை அறிவிக்க உள்ளது. அதாவது தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், அரிசி, துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்கிவருகிறது. இந்நிலையில் ரேசன் கார்டுகளுடன் வங்கி கணக்கு இணைக்க வேண்டும், வங்கி கணக்கு இல்லாதோர், புதிதாக கணக்கு தொடங்கி இணையம் வழியாக Upload செய்ய வேண்டும் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. அது குறித்த தகவலை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
ரேஷன் கார்டிற்கு வங்கி கணக்கு இனி கட்டாயம்:
இந்த அறிவிப்பு படி தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் சுமார் 14,86,500 குடும்ப அட்டைதார்களுக்கு எந்த வங்கி கணக்கு எண்ணும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் இவர்களிடம் Bank Account இருந்தாலும், இவர்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தால் வங்கி கணக்கு இல்லை என்று தரவுகள் வெளியாகியுள்ளது.
ஆக அணைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் 14,86,500 குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களிடம் ஏற்கெனவே வங்கி கணக்கு இருந்தால், அதன் விவரங்களை பெறுவதற்கும், Bank Account இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) தொடங்குவதற்கு என கூறப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
தாத்தா அப்பா பெயரில் உள்ள மின் இணைப்பில் ஆதாரை இணைப்பது எப்படி?
Bank Account உள்ளவக்ரளுக்கு:
ஏற்கனவே உங்களிடம் Bank Account இருக்கிறது என்றால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைப் பணியளார் உங்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்து, உங்களுடைய வங்கி கணக்கு எண் பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் எடுத்து, அதில் குடும்ப அட்டை எண்ணையும், குடும்பத் தலைவர் பெயரையும் குறிப்பிட்டு வழங்குமாறு பெற்று, அந்தந்த குடும்ப அட்டைதாரர்களுக்குரிய 11 விவரக் குறிப்புகள் அடங்கிய அந்த நகலுடன் இணைத்து, அந்த பகுதிக்குரிய கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர்களுக்கு விவரங்களை அளித்து கம்ப்யூட்டர் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Bank Account இல்லாதவர்கள்:
பேங்க் அக்கௌன்ட் எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களை பொறுத்தவரை அந்த 11 விவரக் குறிப்பு அடங்கிய Sheet-வுடன் சேர்த்து அருகாமையிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை நேரில் அணுகி ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) ஒன்றை ஆரம்பித்து, அதனை குடும்ப அட்டைதாரர் விவரங்களுடன் இணைத்து மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி, கம்ப்யூட்டர் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலமாக பெறப்பட வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |