ரயில் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்.. வழிமுறை இதோ..!

How to order food in train via WhatsApp in tamil 

இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்.. வழிமுறை இதோ..! How to order food in train via WhatsApp in tamil 

நீங்கள் ரயில் அதிகம் பயணம் செய்யும் நபரா அப்படி என்றால் உங்களுக்கானது தான் இந்த பதிவு.. ஆம் IRCTCS-யின் ஜூப் உணவு விநியோக சேவை மூலம் ரயில் பயனர்கள் தங்களது WhatsApp-யில் இருந்து உணவு ஆர்டர் செய்தால் இருக்கைக்கு கொண்டு வந்து கொடுக்கும் வகையில் புது வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. சரி வாங்க வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்ய என்ன வழிமுறைகள் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் ரயிலில் உணவை ஆர்டர் செய்வது எப்படி? | How to order food on your train via WhatsApp Chatbot in tamil

ஸ்டேப்: 1

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு முதலில் உங்கள் போனிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும். அதற்கு +91 7042062070 என்ற எண்ணைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த எண்ணை பதிவு செய்து வாட்ஸ்அப் செய்யலாம். அல்லது
(https://wa.me/917042062070) என்ற இணையதளம் சென்று ஜூப் சாட்போட்டில் உணவு ஆர்டர் செய்யலாம்.

ஸ்டேப்: 2

உங்கள் வாட்ஸ்அப்பில் ஜூப் சாட்போட்டைத் திறக்கவும்.

ஸஃடேப்: 3

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு சென்றவுடன் உங்களின் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும். இது உங்கள் ரயில், இருக்கை எண், பெர்த் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்கும்.

ஸ்டேப்: 4

Zoop உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, நீங்கள் உணவை ஆர்டர் செய்ய விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும்.

ஸ்டேப்: 5

அடுத்து, Zoop chatbot நீங்கள் உணவை ஆர்டர் செய்யக்கூடிய உணவகங்களில் இருந்து உங்களுக்கு விருப்பங்களின் தொகுப்பை வழங்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 சென்னை புறநகர் ரயில் நேரங்கள்

ஸ்டேப்: 6

சாட்போட்டில் ஆர்டர் மற்றும் கட்டண முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் பெறுவார்கள்.

ஸ்டேப்: 7

உணவை ஆர்டர் செய்து பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.

ஸ்டேப்: 8

ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை அடைந்தவுடன் Zoop உங்கள் உணவை டெலிவரி செய்யும்.

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News