ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் இனி WhatsApp வழியாகவும் ஷாப்பிங் செய்யலாம்..!

How to Order on Jiomart Through WhatsApp Tamil 

How to Order on Jiomart Through WhatsApp Tamil 

இப்போது எல்லாம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்குகின்றன. அதிலும் இந்தியாவில் பெரும்பாலும் அனைவருமே ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றன. இந்த சமையத்தில் மக்கள் வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் செய்ய ஜியோமார்ட் அருமையான வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆக ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் இனி WhatsApp வழியாக Jiomart-ஐ பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:

சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. வர்த்தகப் பிரிவுகளின் தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டம், புதிய திட்டங்களின் அறிமுகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தின் போது ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள வாட்ஸ்அப் ஜியோமார்ட் திட்டம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய சேவை மூலம் ஒருவர் ஜியோமார்ட் ஆப் இல்லாமலேயே வாட்ஸ்அப் வாயிலாகப் பொருட்களைத் தற்போதைய விலையில் ஆர்டர் செய்யலாம்.  சரி வாட்ஸ்அப்-பைப் பயன்படுத்தி ஜியோமார்ட்-யில்  எப்படி ஆர்டர் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம் வாங்க.

How to Order on Jiomart Through WhatsApp Tamil:

Step: 1

உங்கள் மொபைலில் முதலில் ஜியோமார்ட்-ன் எண்ணை +917977079770 சேமிக்க வேண்டும்.

Step: 2

இப்போது, இந்த எண்ணுக்கு “HI” என்று அனுப்பவும்.

Step: 3

பின்னர், “Get Started” என்பதைக் கிளிக் செய்யவும்.

Step: 4

அதில் அடுத்து வரும் பக்கத்தில் “view Catalog” என்பதைக் கிளிக் செய்து பழங்கள் மற்றும் காய்கறிகள், பிற உணவு பொருட்கள், பிராண்ட் உணவுகள் மற்றும் பல போன்ற பல்வேறு வகையான பொருட்கள் திரையில் தோன்றும்.

Step: 5

அதில் உங்களுக்கு தேவையான அனைத்து தயாரிப்புகளையும் சேர்த்து Send to Business” என்பதைக் கிளிக் செய்து உங்கள் முகவரியை உறுதிப்படுத்தி “Confirm” என்பதைக் கிளிக் செய்யவும்.

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News