Gpay மூலம் நமது பணம் திருட்டு போகாமல் இருக்க இதை பண்ணுங்க..!

Advertisement

How to protect our money from GPay?

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் பலவகையான முறைகளில் இந்த உலகம் முழுவதும் திருட்டு நடக்கிறது. மனிதர்களிடம் நேரடியாகவும் திருடுகின்றன, மறைமுகமாகவும் திருடுகின்றன. ஆக நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் Gpay மூலம் இப்பொழுது திருட்டு நடப்பதாக தகவல்கள் வெளியாகிறது. ஆக Gpay மூலம் நம் பணம் திருட்டு போகாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும். என்ன செய்ய கூடாது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்தறியாக்கம் வாங்க.

GPay Scam-யில் இருந்து நமது பணத்தை எவ்வாறு பாதுகாப்பது? – How to protect our money from GPay?

No: 1

Gpay, Phone Pay, Paytm pay என எந்த ஒரு UPI செயலியாக இருந்தாலும் சரி அவற்றில் இருந்து ஏதாவது லிங்க் அனுப்பப்பட்டால் அதனை கிளிக் செய்ய வேண்டாம். Gpay மூலமாக Link அனுப்பப்பட்டு அதன் மூலமாகவும் திருட்டு நடந்துகொண்டிருக்கிறது. ஆக யாராக இருந்தாலும் சரி Gpay மூலமாக Link அனுப்பி அதன் மூலமாக பணம் செலுத்துகிறேன் என்று யார் சொன்னாலும் அந்த லிங்கை கிளிக் செய்திவிடாதீர்கள், ஒருவேளை அந்த லிங்கை கிளிக் செய்தீர்கள் என்றால் அதற்கப்புறம் உங்கள் பணம் பறிபோகும்.

இது Gpay-யின் தவறு இல்லை Gpay-யில் பொதுவாக மெசேஜ் அனுப்பும் ஆப்சன் மட்டும் தான் உள்ளது. Gpay மட்டுமல்லாமல் Phone Pay, Paytm pay-யிலும் உள்ளது. அனால் அவற்றின் மூலமாக லிங்க் அனுப்பியும் பணம் திருடுகின்றன.

No: 2

தமிழ்நாடு காவல் துறை தற்பொழுது எச்சரிக்கையிட்டுள்ளனர், அதாவது உங்கள் Gpay-ற்கு தெரியாமல் நாம் பணம் அனுப்பிவிட்டேன், அந்த பணத்தை திரும்ப அனுப்பிவிடுங்கள் என்று யாராவது சொல்லுவாங்க, நாம் அதை நம்பி பணத்தை திருப்பி அனுப்பினோம் என்றால் நமது அக்கௌன்டில் இருந்து பணம் திருட்டு போகிறது என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், அப்படி என்றாவது போன் செய்து சொல்ராங்க அப்படின்னா, அவர்களை நம்பி பணத்தை திருப்பி அனுப்பாமல் அவர்களுக்கு போன் செய்து உங்கள் ID proof-ஐ எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலைத்திற்கு வந்துவிடுங்கள் அங்கு வந்து உங்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி நீங்கள் கவனமாக இருங்கள் என்று தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காவல்துறை எச்சரிக்கை.! Gpay பயன்படுத்துகிறவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி ஆகாதீங்க..

No: 3

தற்பொழுது நாம் பயன்படுத்தும் Gpay, Phone Pay, Paytm pay போன்ற எந்த UPI செயலியாக இருந்தாலும் சரி அவற்றில் இருந்து நம் பணம் அனுப்பும் போது நமது Account-யில் பணம் டெபிட் ஆகிவிடும் ஆனால், நாம் யாருக்கு பணம் அனுப்பினோமோ அவர்களுக்கு பணம் ரிஸீவ் ஆகிருக்காது. இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்றால்.

சம்பந்தப்பட்ட கஸ்டமர் கேருக்கு போன் செய்து நாம் தெரியப்படுத்த வேண்டும், அப்படி நம் தெரியப்படுத்திவிட்டோம் என்றால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நமது Account-யில் அந்த பணம் திரும்ப வந்துவிடும்.

போன் செய்து தெரியப்படுத்தியும் நமது பணம் திரும்ப வரவில்லை என்றால் Transition செய்யப்பட்ட நாளில் இருந்து, அவர்கள் டிலே செய்த ஒவ்வொரு நாளுக்கும் அந்த UPI செயலில் நமக்கு இழப்பீடு தர வேண்டும்.

போன் செய்து பணமும் திரும்ப வரவில்லை, அதேபோல் அதற்கான இழப்பீடும் தரவில்லை என்றால் நீங்கள் அவர்களை பற்றி நாம் கம்ளைண்ட் பண்ணலாம். அதாவது 2019-ஆம் ஆண்டு Ombudsman Scheme for Digital Transactions என்று RBi கொண்டுவந்தாங்க அதன்படி ஒரு புகார் படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பலாம் அல்லது போன் நம்பர் அல்லது மெயில் ஐடி மூலமாக கம்ளைண்ட் தெரியப்படுத்தலாம். அல்லது RBI.OR.IN என்ற இணையதளத்திற்கு சென்றும் நீங்கள் கம்ளைண்ட் கொடுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Gpay வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement