How to Put Two Whatsapp Accounts on One Phone in Tamil
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் வாட்சப் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே பயனர்களை மகிழ்விக்கும் வகையில் வாட்ஸப்பில் வரிசையாக அப்டேட்டுகளை இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான அப்டேட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது பலரும் இரண்டு போன் பயன்படுத்துகிறார்கள். காரணம் பர்சனல் பயன்பாட்டிற்காக ஒன்றும், வேலைக்காக ஒன்றும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதிலும் வாட்சப் இரண்டு பயன்படுத்துவதற்காக இரண்டு போன்களை பயன்படுத்துகிறார்கள். சரி வாங்க இந்த அப்டேட்டை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஒரே போனில் இரண்டு வாட்சப் கணக்கு:
ஒரே வாட்சப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த வேண்டுமென்றால் உங்களிடம் இரண்டு மொபைல் நம்பர் இருக்க வேண்டும். இந்த இரண்டு சிம்களும் இயங்கி கொண்டிருந்தால் மட்டுமீ இதனை பயன்படுத்த முடியும்.
எப்படி பயன்படுத்துவது.?
முதலில் உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் ஒபன் செய்து கொள்ளுங்கள். அதில் வலப்புறம் மேலே இருக்கும் 3 புள்ளிகளை க்ளிக் செய்து, அதில் செட்டிங்ஸ் உள்ளே செல்லுங்கள்.
அங்கே ப்ரோபைல் படத்திற்குக் கீழே Drop down இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்களது மற்றொரு கணக்கைச் சேர்த்துக் கொள்ள முடியும். இங்கே உங்கள் புதிய மொபைல் நம்பரை நீங்கள் பதிவிட வேண்டும்.
SBI பேங்கில் அக்கவுண்ட் வச்சு இருக்கீங்களா அப்படினா இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க
அதற்கு ஒடிபி வெரிஃபிகேஷன் வரும். அந்த பயன்பாட்டை முழுமையாக முடித்தால் போதும் ஒரே மொபைலில் நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.
தற்போது பீட்டா யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும். இந்த அம்சத்தை பெறுவதற்கு வாட்ஸப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |