ICICI Bank Hikes FD Interest Rates in Tamil
ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவில் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது என்ன தகவல் என்று தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் ICICI வங்கியின் வாடிக்கையாளராக இருக்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு ஒரு முக்கியமான தகவலை தான் கூற போகிறேன். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அதை தெரிந்து கொள்ளவும்.
போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா |
ICICI வங்கியின் வாடிக்கையாளரே உங்களுக்கு தான் இந்த நியூஸ்..!
நம் இந்திய நாட்டில் உள்ள வங்கிகளில் 2 ஆவது பெரிய வங்கியாக செயல்படுவது ICICI வங்கி தான். இந்த ICICI வங்கி தனியார் துறையை சேர்ந்த வங்கியாகும். தற்போது ICICI வங்கியானது 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய்க்கு குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கான (FD) வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
அதாவது டெபாசிட்டுகளுக்கு 4.75 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையிலான ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா |
மேலும் ICICI வங்கியில் FD வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் மாதம் 7, 2023 ஆண்டு அமலுக்கு வந்துள்ளது. காரணம் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து 6 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் ICICI வங்கியும் அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதற்கு பிறகு அதிகபட்சமாக வட்டி விகிதம் 7.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக FD வட்டி விகிதங்களின் திருத்தத்தைத் தொடர்ந்து, ICICI வங்கி, உள்நாட்டு, NRO, NRE டெபாசிட்டுகளுக்கு ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள வட்டி விகிதங்களை, பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 4.75 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வழங்குகிறது.
இதனால் உள்நாட்டு, NRO & NRE வைப்புகளுக்கான FD வட்டி விகிதங்கள் 5 கோடிக்கு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |