ICICI வங்கியின் வாடிக்கையாளாரா நீங்கள்..? அப்போ இந்த மாஸான நியூஸ் உங்களுக்கு தான்..!

Advertisement

ICICI Bank Introduces EMI Facility for UPI Payments in Tamil

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் அதற்காக நீங்கள் மொத்த தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் EMI வசதி உள்ளது. அதாவது நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்தை மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி கொள்ளலாம். இந்த EMI முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் நடுத்தர மக்கள் கூட எவ்வளவு அதிகமான விலை உள்ள பொருட்களையும் எளிதில் வாங்க முடிகின்றது.

ஆனால் இந்த EMI தொகையை செலுத்துவதற்கான முறை பலருக்கும் கஷ்டமாக உள்ளது. அதற்காக தான் ICICI வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதனை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்ன சொல்றீங்க இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா

UPI-ல் இனி EMI வசதியா..?

ICICI Bank Introduces EMI Facility for UPI Payments in Tamil

பொதுவாக EMI முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவைப்படுகிறது. இன்றைய சூழலிலும் பலருக்கும் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு என்றாலே என்னவென்றே தெரியாமல் உள்ளது.

ஆனால் UPI என்றால் அனைவருக்குமே தெரியும். அதனால் UPI-யை பயன்படுத்தி EMI செலுத்துவதற்கு ICICI வங்கி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் Bye Now Pay Later என்ற வசதியை பயன்படுத்தி இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> UPI மூலம் பணம் அனுப்புபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்

அதாவது நீங்கள் இந்த வசதியை  பயன்படுத்தி குறைந்தது ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை 3, 6 அல்லது 9 மாதங்களுக்கு தவணை முறையில் செலுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் அதிகபட்ச பண பரிமாற்றம் UPI மூலம் செய்யப்படுவதையும் மேலும் இந்த Bye Now Pay Later முறையை அதிக அளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் தான் இந்த அறிவிப்பை அறிவித்தோம் என்று ICICI வங்கியின் டிஜிட்டல் சேனல்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்களின் தலைவர் பிஜித் பாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Gpay, PhonePe மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள் இனி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement