India vs Sri Lanka World Cup Details in Tamil
நாம் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் அதனை விளையாடுவது அல்லது விளையாடுவதை பார்ப்பது நமக்கு மிக மிக பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு ஒரு சில விளையாட்டு தான் பிடிக்கும். அப்படி பலருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று தான் கிரிக்கெட். அப்படி நம்மில் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக விளையாட்டுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் தான் கிரிக்கெட் விளையாட்டு பற்றிய ஒரு தகவல் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அது என்ன தகவல் என்று அறிந்து கொண்டு மகிழுங்கள்.
தோனியின் All Time சாதனையை முறியடித்த ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அட்டகாசம்
இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுவித்த இந்தியா:

தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
அதனால் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
இந்தியா அணிக்கு அக்தர் பாராட்டு:

எனவே இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா வென்றுள்ளதால் நிச்சயம் இம்முறை 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வலுவான பேட்டிங், பவுலிங் செயல்பாடுகளால் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இரக்கமற்ற அணியாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
மேலும் பொதுவாகவே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்களை மட்டுமே கொண்டாடும் இந்திய ரசிகர்கள் இனிமேல் வெற்றிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனுடன் மட்டுமில்லாமல் தற்போதைய இந்திய அணியை கோப்பையை வெல்வதிலிருந்து எதிரணிகளால் தடுத்து நிறுத்துவது அசாத்தியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரை வென்றும் கூட சரிவை சந்தித்துள்ள இந்திய அணி
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














