போன்களில் FM வசதி கட்டாயம்
வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் காணப்போகும் பதிவு அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இருக்கும். பொதுவாக இன்று தான் ஸ்மார்ட் போன் போன்ற வசதிகள் இருக்கிறது. ஆனால் அந்த கால கட்டத்தில் ரேடியோ மூலம் தான் நாட்டில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொண்டு வந்தார்கள். அதுபோல ஸ்மார்ட் போன் வருவதற்கு முன் பட்டன் போன்களில் FM ரேடியோ வசதி இருந்தது. ஆனால் தற்போது நாம் வாழும் இந்த காலகட்டத்தில் எல்லாம் ஸ்மார்ட் போனின் பயன்பாடு தான் அதிகமாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு ஒரு திட்டத்தை அமல்படுத்த உள்ளது. அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
இனி ஸ்மார்ட் போன் அனைத்திலும் FM வசதி..!
பெரும்பாலும் அன்றைய சூழ்நிலையில் நாட்டில் நடக்கும் விஷயங்களை FM ரேடியோ மூலம் தான் தெரிந்து கொண்டு வந்தார்கள். ஆனால் நாம் வாழும் இந்த நவீன உலகில் ஸ்மார்ட் போனிலேயே Youtube வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டில் நடக்கும் தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறார்கள்.
அதனால் மத்திய அரசு இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் FM ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு காரணம் FM ரேடியோ சேவையானது மிகவும் உபயோகமானது. ஏனென்றால் செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் இன்டர்நெட்டிற்கு பதிலாக இந்த FM ரேடியோ சேவைகள் மக்களுக்கு உதவும் என்றும், FM ரேடியோவை பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதே இதற்கு காரணம்.
ரயிலில் செல்பவர்களுக்கு தொடர்ந்து அதிரடியான OFFER. அது என்ன தெரியுமா |
மேலும் FM ரேடியோ தான் முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள் அனைவருக்கும் பேரிடர் காலங்களின் போது FM ரேடியோக்கள் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் கொரோனா காலத்தின் போது பெருந்தொற்றுடன் போராடுவதற்கு FM ரேடியோக்கள் தான் அதிக அளவில் உதவி செய்துள்ளன என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
எனவே இனி தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் FM ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று இந்திய Cellular மற்றும்Electronic Association மற்றும் Manufacturers Association for Information Technology ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாஸ்வேர்ட் இல்லாத இன்டர்நெட் உலகம்.. கூகுள் நிறுவனம் கூறுவது என்ன
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |