Indian Railway Latest News in Tamil
இன்றைய காலத்தில் ரயிலில் செல்வதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் விரும்புகிறார்கள். இந்திய ரயில்வே அமைச்சகத்தில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. ஆனால் இன்றைய காலத்தில் பெரிய நகரம் முதல் சிறிய கிராமம் வரை எல்லா இடங்களிலும் ரயில்வேயாக மாறிவிட்டது. இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள அனைத்து அறிவிப்பு பலகைகளும் மாற்றப்போகிறார்கள் என்ற அறிவிப்பை பற்றிய தகவல்களை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க..
இந்திய ரயில்வே அறிவிப்பு பலகை மாற்றுதல் :
இந்திய ரயில்வே முழுவதும் ஒரே மாதிரியான அறிவிப்பு பலகைகள் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பலகையானது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே அறிவிப்பு பலகையாக இருந்தாலும், அதில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இதனுடைய வண்ணம், அளவு இவை எல்லாம் மத்திய அரசு கூறும் முறைப்படி தான் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பலகையின் எழுத்துக்கள், நிறம், எழுத்துக்களின் அச்சு மற்றும் பலகையின் அளவு போன்றவற்றை மாற்றுவதாக தகவல்களை திட்டமிட்டுள்ளது. இதனை இந்தியா முழுவதும் பின்பற்றுவதாக முடிவு செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ரயில்வே ஸ்டேஷன்களில் டிஜிட்டல் போர்டுகளும் கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பலகையில் எந்த ஃபான்ட் உட்பட தகல்களை இன்னும் ரயில்வே அமைச்சகம் வெளியிடப்படவில்லை.
திருச்சி – மயிலாடுதுறை ரயில் நேர அட்டவணை
இந்த பலகை மாற்றத்தால் பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் எந்த பிரச்சனைகளும் இல்லாதவாறும், அது எல்லோருக்கும் புரியும் வகையில் அறிவிப்பு பலகை கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை இடத்தில் இருக்கும் புகைப்படத்தினையும் அனைத்து ரயில் நிலையத்திலும் ஒரே மாதிரியாக மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 1257 ரயில்வே நிலையம் அம்ரீத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், அதிலும் இத்தகைய மாற்றம் வருவதாக கூறப்படுகிறது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! உங்களுக்கு தாங்க இந்த நியூஸ் இன்னும் தெரியாதா…!
புதியதாக மாற்றும் வார்த்தைகள் லோக்கல் மக்களுக்கு புரியும் வகையிலும், சுலபமாக இருக்கும் வகையிலும் ஒரே மாதிரியான எழுத்து வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கப்படும் என்றும் இந்திய ரயில்வே நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |