ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்.. இனி அனைத்தும் ஒரே ஆப்பில்..

Advertisement

Indian Railway Super App in Tamil 

இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் முறையாக மாறி வருகிறது. மக்களுக்கு ஒவ்வொரு வேலையையும் எளிதாகும் வகையில் பல்வேறு தொழில்நுட்பக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் இருக்கின்றஇடத்தில் இருந்தே நமக்கு தேவையான அனைத்தையும் செய்து விடலாம். அந்த அளவிற்கு உலகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அந்த வகையில், இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு வசதிக்காக பல்வேறு முறைகளை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே மிகவும் பயனுள்ள சூப்பர் ஆப்பை உருவாக்கி வருகிறது. அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Super App Railway in Tamil:

இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகளின் வசதிக்காக அணைத்து சேவைகளையும் ஒரே ஆப்பில் செய்து கொள்ளும் வகையில் சூப்பர் ஆப்பை உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பின் மூலம், டிக்கெட் முன்பதிவு, ரயிலின் ஸ்டேட்டஸ், புகார்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் போன்ற பலவற்றை செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரயில்வேயின் தற்போதுள்ள அணைத்து பயன்பாடுகளிலும் உள்ள சலுகைகளையும் சூப்பர் ஆப் ஒருங்கிணைக்கும். அதாவது,  Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு மற்றும் கூடுதலாக  PortRead, Satark, TMS-Nirikshan, IRCTC Rail Connect, IRCTC eCatering Food on Track மற்றும் IRCTC Air ஆகியவையும் இந்த சூப்பர் ஆப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

இந்திய ரயில்வே நிறுவனம் பயணிகளின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் சூப்பர் ஆப்பை உருவாக்கி வருகிறது. பயணிகளின் அணைத்து தேவைகளையும் இந்த செயலி மூலம் செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த ஆப்பை இந்திய ரயில்வே அமைச்சகத்தின்   CRIS அமைப்பு உருவாக்கி வருகிறது. இந்த சூப்பர் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இனிமேல் ஒரே ஒரு Train Ticket இருந்த போதும் நீங்க 56 நாட்கள் வரை Train-ல பயணிக்கலாம்

சூப்பர் ஆப்பில் என்ன செய்யலாம்.?

இந்த சூப்பர் ஆப்பில் டிக்கெட் முன்பதிவு, ரயில் கண்காணிப்பு, புகார்பதிவு, உணவு ஆர்டர் செய்தல், ரயில் பயணத்திற்கான தகவல்கள் மற்றும்  ரயில்வே சேவைகள் தொடர்பான அம்சங்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

சூப்பர் ஆப்பின் நோக்கம்:

இந்திய ரயில்வே, பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த சூப்பர் ஆப்பை உருவாக்கி வருகிறது.

இந்த App மூலம் நேரடியாக பிரதமர் மோடியிடம் நாம் பேசலாமா!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link
Advertisement