ரயில் பயணிகளுக்கு இனி இதுவும் இலவசமாம்…! என்னங்க சொல்றீங்க அப்புடியா..?

Advertisement

ரயில் பயணிகள் கவனத்திற்கு

பொதுவாக நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஏதாவது ஒரு வாகனம் கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால் நம்மால் நடந்தே அத்தகைய இடத்திற்கு போய் சேர முடியாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் மாறி எந்த பயணம் நமக்கு வசதியாக உள்ளதோ அதில் பயணம் செய்கிறோம். இத்தகைய பயணங்களில் ரயில் பயணமும் ஒன்று. இப்படி பயணம் செய்யும் போது நாம் எப்போதும் நமக்கு பிடித்த மாதிரியான உணவு அல்லது ஸ்னாக்ஸ் வகையினை வாங்கி சாப்பிட்டு கொண்டே தான் செல்வோம். அதுவும் பஸ், ரயில் இவை எல்லாம் கொஞ்சம் தாமதமாக வந்தால் அவ்வளவு தான் கையில் இருக்கும் பணம் செலவாகும் வரை வாங்கி சாப்பிடுவோம். அதனால் தான் பயணிகளின் இத்தகைய நிலையினை கருத்தில் கொண்டு ரயில்வே நிலையம் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன அறிவிப்பு என்றும் அதன் மூலம் ரயில்வே பயணிகள் எப்படி பயன் அடையலாம் என்றும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

இதையும் படியுங்கள்⇒ தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி.. இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்.. 

ரயில் பயணத்தின் போது:

ரயில் பயணத்தின் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான உணவு அல்லது ஸ்னாக்ஸினை வாங்கி சாப்பிடுவது வழக்கமான ஒன்று.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் ரயிலில் பயணம் செய்தாலும் கூட அங்கு விற்பனை செய்யப்படும் தண்ணீர் முதல் உணவு பொருட்கள் என அனைத்திற்கும் பணம் செலுத்துவது என்பது கட்டாயமான ஒன்று.

இதுநாள் வரையிலும் இந்த நடைமுறையில் செயல்பட்டு கொண்டிருந்தாலும் கூட இப்போது ரயில்வே நிலையம் ஒரு புதிய அறிவிப்பை ரயில் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

அத்தகைய அறிவிப்பு என்னவென்றால்..? ரயில் தாமதமாக வரும் பட்சத்தில் ரயில் பயணிகள் அங்கு ரயில்வே கேட்ரிங் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் உணவு, குளிர்பானம் மற்றும் தண்ணீர் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதியானது ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் மட்டும் பொருந்தும். அதுபோல இந்த வசதி Express Train பயணிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் சதாப்தி, துரந்தோ மற்றும் ராஜ்தானி ரயில் பயணிகளுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கூறும் குட் நியூஸ் என்னனு தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement