இனி எல்லா ரயிலுமே புதுசா இருக்கும்..! அப்படி என்ன செய்ய போறாங்கன்னு தெரியுமா..?

Advertisement

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் 

வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பிடிக்குமா..? யாருக்கு தான் ரயிலில் பயணம் செய்ய பிடிக்காது சொல்லுங்கள். ரயில் பயணம் என்பது ஒரு மகிழ்ச்சியான பயணம் ஆகும். அது ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். சரி ரயில் பயணிகளுக்காக இந்தியன் ரயில்வே பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுபோல தற்போது ஒரு புதிய திட்டத்தை ரயில் பயணிகளுக்காக கொண்டு வந்துள்ளது. அது என்ன திட்டம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இனி எல்லா ரயிலும் புதுசா தான் இருக்கும்..! 

இனி எல்லா ரயிலும் புதுசா தான் இருக்கும்

நம் உலகிலேயே மிகவும் பழமையான ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருந்து வருகிறது. 1850 ஆம் ஆண்டுகளில் இந்தியன் ரயில்வே தனது சேவையைத் தொடங்கியது. அதன் பிறகு இந்தியன் ரயில்வே மெல்ல மெல்ல ரயில் சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் மூலம் பயணிகளுக்காக இந்தியன் ரயில்வே அறிவிக்கும் திட்டங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் தற்போது இந்திய ரயில்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

போன் பயனர்களே மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி என்னன்னு தெரியுமா

இதற்கு காரணம் இந்திய ரயில்கள் எப்பொழுதும் தூய்மையாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இல்லை என்று பயணிகளிடம் இருந்து புகார்கள் வருகிறது. அதை தடுக்கும் விதமாக தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர்.

அது என்னவென்றால்,  இந்தியன் ரயில்வே, ரயில்களை சுத்தமாக பராமரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளனர். அதாவது இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கான தானியங்கி (Automatic) சுத்தம் செய்யும் இயந்திரங்களை உற்பத்தி செய்ய, கோத்ரேஜ் குழுமம் ஜப்பானைச் சேர்ந்த JCW என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.  

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு  யார் தெரியுமா

இந்தியாவில் தற்போது ஊழியர்களே ரயில்களைச் சுத்தம் செய்து வருகிறார்கள்.  ஆனால் இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இதுபோல தானியங்கி (Automatic) முறையில் ரயில்களைச் சுத்தம் செய்யும் முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 50 தானியங்கி (Automatic) முறையில் சுத்தம் செய்யும் அமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு விரைவில் வரும் இந்த புதிய பராமரிப்பு இயந்திரங்கள், நிலையான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் கிடையாது..  பின்ன யாருக்கு 1000 ரூபாய் கிடைக்கும்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement