இந்தியாவின் வினோதமான ரயில் நிலையம்
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தான் கூறப்போகிறேன். அதென்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அந்த தகவலை தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பிடிக்குமா..? யாருக்கு தான் ரயிலில் பயணம் செய்ய பிடிக்காது சொல்லுங்கள். ரயில் பயணம் என்பது அழகிய தருணம் ஆகும். நீண்ட தூர பயணங்களுக்கு ரயிலை தான் பலரும் தேர்வு செய்கிறார்கள். சரி நாம் இப்போது நம் பதிவுக்கு வருவோம். நம் இந்தியாவில் வினோதமான ரயில் நிலையம் ஓன்று உள்ளது. அதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
2 மாநிலங்கள் கொண்ட ஒரே ரயில் நிலையம் எங்கு உள்ளது..?
பொதுவாக நம் இந்திய நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதுபோல ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். நாம் ஒரு சில ரயில் நிலையங்களை பார்த்திருப்போம். ஆனால் 2 மாநிலங்கள் கொண்ட ஒரே ரயில் நிலையத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? அதை பற்றி இங்கு காண்போம்.
இந்தியாவின் தனித்துவமான ஒரு இரயில் நிலையம் 2 மாநிலங்களில் அமைந்துள்ளது. அதாவது ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, ரயில் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும், ரயிலின் மற்றொரு பாதி இன்னொரு மாநிலத்திலும் நிற்கும்.
இனி ரேஷன் கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம் |
இப்படிப்பட்ட இந்தியாவின் வினோதமான ரயில் நிலையம் பவானி மண்டி ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தனித்துவமான ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 நடைமேடைகள் மட்டுமே உள்ளன. 2 மாநில பயணிகளும் இங்கிருந்து தான் பயணம் செய்கின்றனர்.
Latest News 👉👉 Google வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.. மே 10 -ம் தேதிக்கு பிறகு கூகுளின் தலையெழுத்தே மாறப்போகிறது..
மேலும் இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த இந்தியாவின் வினோதமான ரயில் நிலையம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல இந்த பவானி மண்டி ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் பெயர் பலகை ரயில் நிலையத்தின் ஒரு முனையிலும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் பெயர் பலகை மறுமுனையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
👉புதிய அறிவிப்பு ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுக்கவில்லையா இனி பயப்பட வேண்டாம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |