வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5-வது முறையாக CSK அணி IPL கோப்பையை அதிரடியாக வென்றது..! ஆனந்த கண்ணீர் வடித்த தோனி..!

Updated On: May 30, 2023 12:57 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

CSK Beat Gujarat Became IPL 2023 Champion in Tamil

இந்தியாவில் விளையாடப்படும் மிகவும் பிரபலமான மற்றும் மக்களின் மனதில் மிகுந்த இடத்தை பிடித்த IPL போட்டியின் இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியை காண லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து இருத்தார்கள். அப்படி அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட இந்த இறுதி போட்டியில் எந்த அணி வென்றது எவ்வளவு ரன்கள் வைத்தியத்தில் வென்றது என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

CSK டாஸ் வென்றது:

இதில் டாஸ் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பவுலிங் தேர்வு செய்தார். இதனை பற்றி கேட்கும் பொழுது தோனி மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்பதால், அதனை மனதில் வைத்து கொண்டு பவுலிங் தேர்வு செய்தோம் என்று அவர் கூறினார்.

குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தான் பேசும்பொழுது கூட, டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம் என்றார், ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றை பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் பேட்டிங் சிறப்பாக விளையாடுவோம் என கூறினார்.

குஜராத் அணியின் கில் மற்றும் சஹாவின் சிறப்பான தொடக்கம்:

அருமையான பார்மில் இருந்த சுப்மான் கில் மற்றும் விருதிமான் சஹா ஆகியோர் வழக்கம் போல குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் 2 ஓவர்கள் மெதுவாக தொடங்கினாலும், 3-வது ஓவரில் இருந்து டாப் கியரில் அடிக்க ஆரம்பித்து ரன்களை குவிக்க தொடங்கினார்கள்.

அதன் பிறகு வந்த தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே இருவரின் ஓவர்களிலும் சிக்சரும் பவுண்டரிகளுமான மழையாக பொழிய தொடங்கின. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது.

ஆனால் 6.6 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது. அதாவது 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த சுப்மான் கில், தோனியின் அசத்தலான ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தப்பட்டார்.

தமிழக வீரர் சுதர்சன் வெடித்த ரன் சரவெடிகள்:

கில் அவுட்டானாலும் விருதிமான் சஹா சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்திருந்தாலும் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவரும் வீழ்த்தப்பட்டார். குஜராத் அணியின் ஓப்பனிங் இறங்கிய இருவரும் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அதன் பிறகு வெளுத்து வாங்கினார்.

கிடைக்கும் பந்துகளையெல்லாம் பவுண்டரியும் சிக்சருமாக விளாசிய அவர், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்கள் எடுத்திருந்தபோது பத்திரனா பந்தில் எல்பிடபள்யூ என்ற முறையில் அவரும் ஆட்டமிழந்தார். இந்நிலையிலும் கடைசி வரை தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். 

தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவே தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடியிருந்தாலும், ரசிர்கள் அவரை பாராட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

IPL ஆட்டத்தில் புதிய விதிகள் இது நல்லதா கெட்டதா

CSK அணிக்கு மெகா இலக்கை நிர்ணயம் செய்தது குஜராத் அணி:

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி இமாலய இலக்கை CSK அணிக்கு வைத்தது. அதாவது 20 ஓவர்களை விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

அதாவது 215 ரன்கள் எடுத்தால் மட்டுமே IPL 2023-ல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றலாம் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது பேட்டிங்குக் களமிறங்கியது.

சென்னை அணியின் மழை குறுக்கீடு:

அதன் பிறகு சென்னை அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது. இந்நிலையில் 3 பந்துகள் வீசப்பட்டது சிஎஸ்கே அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மழை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமாக பெய்ததால் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழ ஆரம்பித்தது.

மழை நின்ற பிறகு 20 ஓவர்களில் இருந்து 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கியது. அதன் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு 15 ஓவர்களுக்குள் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் அதிரடியாக ரன்களை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் 4 ஓவர்களில் சென்னை அணி 50 ரன்களை எடுத்தது.

ஆனால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து ருதுராஜ் 26 ரன்களுக்கும், கான்வே 47 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு மகுடம்:

IPL 2023 champion in tamil

ஆனால் அடுத்து வந்த சென்னை அணியின் பிளேயர்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் எங்கு விட்டர்களோ அந்த இடத்தில் இருந்து அடித்து விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்கள்.

அதிலும் குறிப்பாக ஷிவம் துபே மற்றும் ராயுடு ஆகியோர் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச தொடங்கினர். தனது கடைசி போட்டியில் விளையாடிய ராயுடு 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தோனி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் என தேவைப்பட்டபோது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி சிஎஸ்கேவை வெற்றி பெற செய்தார்.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. ஜடேஜா வெற்றி ரன்களை அடித்தவுடன் கண்ணீர்விட்ட தோனி, ஜடேஜாவை தூக்கி கொண்டாடினார்.

2023 ஆம் ஆண்டின் IPL போட்டிகளுக்கான அட்டவணை

நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now