IPL நியூஸ் டுடே – IPL News Today
வணக்கம் நண்பர்களே.. IPL ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. IPL போட்டியில் கொல்கத்தா அணியில் இன்று விலகிய உள்ள இரண்டு இந்திய வீரர்களை பற்றி தான் இந்த பொதுநலம்.காம் செய்தியில் தெரிந்துகொள்ள போகிறோம்.
IPL T20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய நிலையில், வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் சொந்த காரணங்கள் மற்றும் தேசிய அணிக்கான போட்டிகள் காரணமாக கொல்கத்தா அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய்யை ரூபாய் 2.8 கோடிக்கு கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜேசன் ராயின் அடிப்படை விலை ரூபாய் 1.5 கோடியாக இருந்த நிலையில் அதைவிட கூடுதல் விலைக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்று இரவு தனது சொந்த மைதானமான ஈடன் கார்டனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஜேசன் ராய் விளையாடமாட்டார் எனவும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இடம்பெறுவர் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொல்கத்தா அணியில் முதல் விக்கெட் கீப்பர் பேட்மேனாக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மானுல்லா குரூப்ஸிற்கு பதிலாக ஜேசன் ராய் களமிறக்கப்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |