IPL Players Who Miss The 2025 IPL Match In Tamil
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2007 இல் உள்நாட்டு கிரிக்கெட்டை சர்வதேச தளங்களுக்கு மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகளை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட ஆளும் குழுவால் ஐபிஎல் நடத்தப்படும், தொடரின் முதல் இரு அணிகள் அந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இருபது தொடருக்குத் தகுதி பெறும்.
முதல் ஐபில் தொடர் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்நிலையில் ஐபில் போட்டியில் இருந்து சில முக்கிய வீரர்கள் சில உடல் நிலை காரணமாக ஐபில் போட்டியில் இருந்து விளக்குகிறார்கள். எந்தெந்த வீரர்கள் ஐபில் போய்ட்டியில் இருந்து விலகுகிறார்கள் என்பதை இந்த பதிவில் அது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
2025 ஆம் ஆண்டு ஐபில் தொடரை விட்டு விலகும் முக்கிய வீரர்கள்:
பிரைடன் கார்ஸ் SRH:
சன்ரைசேர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாட இருந்த பிரைடன் கார்ஸ், ஐபில் போட்டி பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் தற்போது போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். சன்ரைசேர்ஸ் ஹைதெராபாத் அணி இவருக்கு பதிலாக யான் முல்டரை தேர்வு செய்துள்ளது.
லிசாத் வில்லியம்ஸ் MI:
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருந்த லிசாத் வில்லியம்ஸ், அவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக தற்போது நடக்க இருக்கும் ஐபில் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு பதிலாக கார்பின் பாஷை தேர்வு செய்துள்ளது.
ஹாரி புரூக் DC:
டெல்லி அணிக்காக விளையாட இருந்த ஹாரி புரூக் ஐபில் போட்டியில் இருந்து தானாகவிலகி இருக்கிறார். இதனால் அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிசிசிஐ-யால் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
மயங்க் யாதவ் LSG:
லக்னோ அணியின் முக்கிய பந்து வீச்சாளரான மயங்க் யாதவ்-க்கு ஐபில் போட்டி பயிற்சியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தற்போது ஐபில் போட்டியில் தொடர முடியாது. இதனால் அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார். அவர் உடல் நிலை குணமடைந்த பிறகு போட்டியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேக்கப் பெத்தேல் RCB:
அரசிபி அணி தேர்வு செய்யப்பட்ட ஜேக்கப் பெத்தேல் தசைநார் காயத்தால் அவதிபட்டு வருகிறார். இதனால் அவர் இந்த ஐபி தொடரில் பங்குபெற இயலாது. ஆனால் தற்போது இவருக்கு பதில் வேர் ஒரு மாற்று வீரரை ஆர்சிபி அணி அறிவிக்கவில்லை.
ஜோஸ் ஹேசில்வுட் RCB:
ஆர்சிபி அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியை தவறவிட்டார். தற்போது அவர் ஐபிஎல் தொடரையும் தவறவிட வாய்ப்புள்ளது.
கே.எல்.ராகுல் DC:
பிசிசி குழு நடத்திய ஏலத்தில் டெல்லி அணி கே.எல்.ராகுலை 14 கோடிக்கு வாக்கப்பட்டார். இந்நிலையில், அவர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்னில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவருடன் கே.எல்.ராகுல் இருக்க விரும்புவதால் அவர் முதல் ஐபிஎல் பாதியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா MI:
மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதிபட்டு வருகிறார். தற்போது அதில் இருந்து குணமடைந்து வரும் அவர், ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்களில் நடக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |