IPL 2025 Sreaming இலவசம் இல்லையா..? எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரியுமா?

Advertisement

IPL Streaming Rights 2025 In Tamil

ஐபிஎல்  போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி சனிக்கிழமையில் இருந்து தொடங்குகிறது. முதல் ஐபிஎல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இந்த ஐபிஎல் போட்டிகளை கடந்த ஆண்டு வரை மக்கள் அனைவரும் ஜியோ சினிமா லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாக பார்த்து வந்தனர். இந்த ஆண்டு ஜியோ ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க இயலாது, அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து இருக்கின்றது.

தற்போது ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணைந்ததால் ஜியோ ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளாலாம் வாருங்கள்.

IPL  Match 2025

ஜியோ அறிவிப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ கடந்த திங்கட்கிழமை ஐபிஎல் போட்டிக்கான கட்டண விலையை அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 299 மேல் உள்ள எந்த ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த புதிய கட்டண விவரங்கள் அமலுக்கு வந்துள்ளது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த அனைத்து போட்டிகளும் ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும்.

ஐபிஎல் போட்டிகளை எப்படி இலவசமாக பார்ப்பது?

மார்ச் 17 ஆம் தேதி முதல் மார்ச் 31 அம தேதி வரை புதிய ஜியோ சிம் அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் ஜியோ சிம்மிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஜியோ வாடிக்கையாளராக இருந்தாலும் அல்லது புதிதாக ஜியோ சிம் வாங்கினாலும், நீங்கள் ரூபாய் 299 மேல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஜியோ பயனர்களுக்கு ஆட்-ஆன் திட்டங்கள் மூலம் கூடுதல் இனிய சேவைகளும் கிடைக்கும்.

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு செய்து வந்தது. மேலும் சில சர்வதேச போட்டிகளையும் இலவசமகாக ஒளிபரப்பியது. அதிகப்படியான ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண ஆர்வம் அளித்த நிலையில் தற்போது கட்டண விவரங்கள் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர ஜியோ பிராட் பேண்ட் (Jio Broad Band) திட்டங்கள் வைத்திருந்தாலும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

எனவே ஐபிஎல் ரசிகர்கள் உங்களுக்கு தேவையான ரீசார்ஜ் பிளானை தேர்வு செய்து ஐபிஎல் போட்டிகளை இலவசமாக கண்டு களியுங்கள்.

IPL Players Who Miss The 2025 IPL Match In Tamil

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News
Advertisement