பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட்.. IRCTC-யின் புதிய திட்டம் – IRCTC Launch Travel Now Pay Later Facility in Tamil
பொதுவாக ரயில் பயணம் என்பது மிகவும் வசதியாக இருக்கும்.. எந்த ஒரு களைப்பு இருக்காது. இதன் காரணமாகவே நீட துறை பயணங்களுக்கு பலர் ரயிலை தேர்வு செய்கின்றன. இத்தகைய ரயில் பயணத்திற்கு ரயில்வே துறை பலவகையான வசதிகளையும் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணமே செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் IRCTC அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
IRCTC-யின் புதிய திட்டம்:
அனைத்து வயது பயணிகளுக்கும் ஏற்ற போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து விளங்குகிறது. இந்த நிலையில் IRCTC புதிய திட்டம் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்த திட்டத்தின் சிறப்பு அம்சமானது என்னவென்று கேளுங்களேன் பயணம் செய்துவிட்டு டிக்கெட் காசை பின்னர் செலுத்துவதுதான் அந்த திட்டத்தின் மிக சிறந்த விஷயம். அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் Travel Now Pay Later.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பொருளை தற்போது வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம். இதேபோன்று திட்டத்தில் தான் IRCTC-யும் தற்போது கவனம் செலுத்திவருகிறது.
இந்தத் திட்டத்தில் கூடுதலாக சிறப்பம்சம் ஒன்றும் உள்ளது. நாம் கடனாக திருப்பி செலுத்தும் பணத்துக்கு வட்டி கிடையாதாம். ரயில் டிக்கெட் என்ன விலையோ அந்த விலையை திருப்பிக் கொடுத்தால் போதுமாம்.
இந்தத் திட்டத்தில் முதலில் பயிற்சி முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஐஆர்சிடிசி மூலம் தினந்தோறும் 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இத்திட்டம் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |