IRCTC எச்சரிக்கை! இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க..!

Advertisement

IRCTC எச்சரிக்கை! இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க..! IRCTC News in Tamil

இன்றைய கால கட்டத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஸ்மார்ட்போன் நமது கையில் இருந்தால் போதும் வீட்டில் இருதபடியே பலவகையான வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளலாம். மேலும் ஒவ்வொரு செயலிகளும் ஒவ்வொரு வகையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. சில செயலிகள் நண்பகத்தனமானதாக இருக்கும். சில செயலிகள் ஆபத்தானதாகவும் இருக்கும். அந்த வகையில் IRCTC ஒரு எச்சரிக்கைவிடுத்துள்ளது. அதாவது இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று. அது என்ன செயலி என்று இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IRCTC எச்சரிக்கை! இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க..!

ஸ்மார்ட்போன் பயனர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு IRCTC ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு பயனர்கள் “irctcconnect.apk,” என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று IRCTC கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

IRCTC வெளியிட்டிருக்கும் இந்த தகவல்களின் படி இவற்றை டவுன்லோட் செய்தால் உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை (Malware) இன்ஸ்டால் செய்துவிடும்.

https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் IRCTC வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களைஉள்ளிட்டால் , ஹேக்கர்கள் அவற்றை தவறுதலாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! உங்களுக்கு தாங்க இந்த நியூஸ் இன்னும் தெரியாதா..!

இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் IRCTC அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று IRCTC சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் IRCTC செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

மேலும் IRCTC சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement