ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி.. ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியுமா

Advertisement

ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஆனது பிப்ரவரி 14 அன்று இணைந்தது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளமும், இதற்கான ஓடிடி தளமும் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் இலவசமா.! இதில் என்னென்ன வீடியோக்கள் வரும் என்றெல்லாம் இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

நமது நாட்டின் டாப் ஓடிடி தளங்களாக இருந்தவை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா. ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை இருந்தவரை டிஸ்னி  நல்ல நிலையில் இருந்தது. ஆனால், எப்போது ஐபிஎல் ஓடிடி உரிமங்கள் டிஸ்னி பறிபோனதோ அதிலிருந்து ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது. இதனால் வேறு வழியின்றி ஜியோ சினிமாஸ் உடன் டிஸ்னி இணைந்தது.

ஜியோ மற்றும் டிஸ்நெப் ஹாட்ஸ்டார் இரண்டும் ஒன்றா இல்லை வெவ்வேறா:

ஜியோ ஹாட்ஸ்டார் பிளான்

ஜியோஹாட்ஸ்டார் என்பதற்கு தனியாக எந்த ஆப்பும் இல்லை. ஏற்கனவே இருந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் தான் ஜியோஹாட்ஸ்டார் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன்படிஹாட்ஸ்டார் வைத்திருப்பவர்கள் அந்த ஆப்பை அப்டேட் செய்தாலே ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாறும். ஜியோ ஹாட்ஸ்டாரில் அனைவரும் இலவசமாக பார்க்கலாம் என்ற நிலை மாறி அதற்கு கட்டணம் செலுத்தி பார்க்கவும் வகையில் அமைத்திருக்கிறது. அதாவது இலவசமாக பார்பபவர்களுக்கு விளம்பரங்கள் வரும், அதுவே கட்டணம் செலுத்துபவர்களுக்கு விளம்பரம் இல்லாமலும், வீடியோ குவாலிட்டி ஆகவும் இருக்கும்.

 தற்போது ஜியோ சினிமாஸ் அல்லது ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருப்போர் தானாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் தங்களின் சந்தா காலம் முடியும் வரை எந்த ஒரு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் அதே கட்டணத்தில் பார்க்கலாம். அதுவே புதிய பயனாளர்களாக இருந்தால் 149 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இருந்தாலும் பல்வேறு வகையான பிளான்கள் இருக்கிறது. அதனை பற்றி காண்போம்.  

மொபைல் பிளான்:

3 மாதத்திற்கு Rs 149 / வருடத்திற்கு  Rs 499 போன்ற பிளான்களில் கிடைக்கிறது. இந்த பிளானில் 1 மொபைலில் மட்டுமே பார்க்கும் வசதி கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இதில் விளம்பரங்கள் வரக்கூடும். இதனை 3 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியிருக்கும்.

Unlimited live sports, Latest Indian movies & shows, Disney+ Originals போன்ற பதிவுகள் இந்த பிளானில் கிடைக்கிறது.

Super Plan:

3 மாதத்திற்கு Rs 299 / Rs 899 /வருடத்திற்கு year போன்ற பிளானில் கிடைக்கிறது. இந்த பிளானில் இரண்டு சாதனைகளை இணைக்க முடியும். மொபைல் மற்றும் இணையதளம் போன்றவற்றில் இணைக்கலாம். விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

Unlimited live sports- Latest Indian movies & shows- Disney+ Originals போன்ற பதிவுகள் இந்த பிளானில் கிடைக்கிறது.

Premium Plan:

மாதந்தோறும் Rs 299 /3 மாதத்திற்க்கு Rs 499  /வருடத்திற்கு  Rs 1499  போன்ற திட்டங்களில் கிடைக்கிறது. இதில் 4 சாதனங்களை இணைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் எந்த விளம்பரமும் காண்பிக்கப்படாது.

Unlimited live sports- Latest Indian movies & shows- Disney+ Originals போன்ற பதிவுகளை நீங்கள் ஆங்கிலம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில் பார்க்க முடியும்.

உங்களுக்கு எது ஏற்றது:

மொபைலில் மட்டும் பார்ப்பவர்கள், மாட்டிரும் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மொபைல் திட்டம் சிறந்தது.

நீங்கள் பல சாதனங்களில் இணைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சூப்பர் பிளானை தேர்ந்தெடுக்கலாம்.

4கே ஸ்ட்ரீமிங், விளம்பரமில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பிரீமியம் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News

 

Advertisement