Jio Launch 5g Today
தொழில்நுட்பம் அதிகம் வருகிறது என்றால் அது ஸ்மார்ட் போன் தான். ஏனென்றால் அதில் நாம் நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்கிறோம். ஆனால் அதற்கு முக்கிய தேவையாக இருப்பது இன்டர்நெட் தான். அதுவும் முன்பு ஒரு நாளுக்குள் இவ்வளவு GB தான் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை..! முக்கியமாக சொல்ல போனாலும் 3g, 4g, என இருந்தது. தற்போது Jio, Airtel என்ற இரு நிறுவங்களும் அவர்களுடைய 5g சேவையை இந்தியாவில் நிறுவவுள்ளதாக தகவல் வெளியாகி, அதேபோல் இரண்டு நிறுவனங்களும் அவர்களின் சேவையை சில நகரங்ககளிலும் மாநிலத்திலும் தொடங்கினார்கள். அதேபோல் தற்போது Jio நிறுவனம் அவர்களின் 5g சேவையை நெல்லை உட்பட 27 நகரங்களில் நிறுவவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அது என்னென்ன நகரம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
Jio Launch 5g Today:
முதலில் தமிழ்நாட்டில் சில நகரங்களில் Jio அவர்களின் 5G சேவையை தொடங்கினார்கள். அது என்ன ஊர் என்றால் தமிழ்நாட்டில் 8 நகரங்களில் 5G சேவை தொடக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன ஊர்கள் என்று பார்ப்போம். கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?
இப்போது இதனை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் பாண்டிசேரி யில் ஜியோவின் சேவையானது முதன்மை நிறுவனமாக உள்ளது.
அதேபோல் ஆந்திரப்பிரதேசம், பீகார், சண்டிஸ்கர், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடக, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நகரங்களில் உள்ள 27 நகரங்களுக்கும் ஜியோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |