Jio New Year Recharge Plan 2024
நாம் அனைவருமே வருடம் முழுவதும் போன் பயன்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்ற போது தான் சற்று பின் வாங்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ரீச்சார்ஜ் என்பது நாம் பயன்படுத்தும் முறையினை பொறுத்தும், நமக்கு எவ்வளவு நாட்கள் வேல்டிட்டி நாட்கள் வேண்டும் என்பதையுமே பொறுத்து அமைகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி ரீசார்ஜ் செய்வார்கள். அதவாது சில பேர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்வார்கள், சில பேர் 6 மாதத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்வார்கள். சில வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். ஏதவாது festival வந்தாலே ரீசார்ஜ் பிளானில் ஏதும் ஆபர் இருக்கிறதா என்று தான் தேடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜியோ நியூ ஐயர் ஆபரை அறிவித்துள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
வெறும் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 மாதத்திற்கு வேலிடிட்டியை வழங்குகிறது..
Jio One Year Plan Offer:
ஜியோவானது 2,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வரை வேலிடிட்டியை வாழங்குகிறது. இந்த பிளானில் புத்தாண்டு ஆபராக கூடுதலாக 24 நாட்கள் வரை வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 912.5GB மொத்த டேட்டாவை வழங்குகிறது, இது 2.5GB/நாள் 4G வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடேட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் இருக்கிறது. நிறுவனம் JioCinema, JioTV மற்றும் JioCloud போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது.
Jio 3227 Plan Details:
ஜியோவின் புதிய வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமான ரூ. 3,227 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவும், வருடத்திற்கு 730 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் காலிங் வசதி போன்றவையும் வழங்குகிறது.
இந்த பிளானில் நீங்கள் பயன் அடைவதற்கு ஜியோவின் இணையதளம், மைஜியோ ஆப்ஸ், ஜியோ ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கிறது. இந்த திட்டமானது இந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து கிடைக்கிறது.
கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |