Jio Recharge 2023 Plan Details in Tamil
Jio நிறுவனம் பலவகையான ரீச்சார்ஜ் திட்டத்தினை வழங்கி வருகிறது. அந்த வகையில், இப்போது 252 வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. Jio நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டமானது நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டமானது நீண்ட நாட்களுக்கு அதிக டேட்டாவை விரும்பும் வாடிக்கையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் ஜியோவின் இந்த புதிய ரீச்சார்ஜ் திட்டம் பற்றிய மேலும் விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Jio Recharge 252 Validity Plan Details in Tamil:
2023 -ஆம் ஆண்டில் Jio நிறுவனம் சூப்பரான புதிய ரீச்சார்ஜ் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் 2023 ரூபாய் ரீச்சார்ஜ் கொண்ட திட்டமாகும். இந்த 2023 ரூபாய் விலை ஆனது 2023-ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோவின் 2023 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டம், தினமும் 2.5 ஜிபி டேட்டாவை 252 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் நீங்கள் 252 நாட்களில் மொத்தமாக 630 ஜிபி டேட்டாக்களை தடையில்லாமல் பெறலாம். மேலும் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது.அதுமட்டுமில்லாமல், 100 SMS நன்மைகளையும் அளிக்கிறது. இது தவிர ஜியோவின் 2023 ரூபாய் விலை திட்டம் JioTV, Jio Cinema, Jio Security, Jio Cloud, போன்ற ஜியோவின் பல இலவச சேவைகளையும் அணுக அனுமதிக்கிறது. இந்த இலவச நன்மைகள் அனைத்தையும் 252 நாட்கள் வேலிடிட்டி முடிவைடயும் வரை பெற்று கொள்ளலாம்.
நீங்கள் Jio SIM பயன்படுத்துபவரா..? அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தான்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |