Jio Recharge Plan Increase News Tamil | Jio Recharge Plan Increase List in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Jio Recharge Plan Increase List in Tamil பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ ஆனது, தற்போது ஜியோவின் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் துயரத்தில் உள்ளார்கள். நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், பயனர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால், இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்தி வரும் நபர்களில் 85% பேர் ஜியோ வாடிக்கையாளர்கள் தான்.
பெரும்பாலானவர்கள் Jio சிம் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Jio Recharge Plan Increase List:
Jio, செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. ஜூலை 03 ஆம் தேதி ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அமல்படுத்த உள்ளது. வழக்கமாக உள்ள கட்டணத்தில் கிட்டத்தட்ட 12 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த் கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 03 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது.
தற்போது மாற்றியமைத்துள்ள Jio Recharge Plan பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- நம்மில் பலபேர், இவற்றில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்பவர்களாக தான் இருப்போம். அப்படி நாம் மாதம் மாதம் செய்யும் ரீசார்ஜ் கட்டண உயர்வை விவரமாக பார்க்கலாம்.
- 155 ரூபாய் – 155 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் இந்த பிளான் இப்போது 189 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- 209 ரூபாய் -209 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளித்து 28 நாட்களுக்கு நீடிக்கும் இந்த பிளான் இப்போது 189 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- 239 ரூபாய்க்கு இருந்து வந்த பிளான் தற்போது 299 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- 299 ரூபாய் ரீசார்ஜ் பேக்கானது 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 399 ரூபாய் 3 ஜிபி டேட்டா பேக் ஆனது, தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |