நீங்கள் Jio SIM பயன்படுத்துபவரா..? அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தான்..!

Advertisement

Jio Wants to Increase Average Revenue Per User in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இன்டர்நெட் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் இன்டர்நெட்டை நமக்கு அளிக்க பல நிறுவனங்கள் உள்ளது. அதாவது Jio, Airtel மற்றும் VI போன்ற பிரபலமான நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் SIM Card-டை வாங்கி நாம் பயன்படுத்துவோம்.

அப்படி நம்மில் பலரும் பயன்படுத்தும் ஒரு SIM கார்டு தான் Jio. இந்த நிறுவனம் ஒரு அறிவிப்பினை அறிவிக்க உள்ளது. அது என்ன அறிவிப்பு அது அதன் வாடிக்கையாளர்களுக்கு நன்மையை அளிக்குமா..? மாறாக தீமையை அளிக்குமா..? என்பதை பற்றியெல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> Jio SIM பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குட் நியூஸ் 91 ரூபாயில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது

Jio Prepaid Plans Rate Increase in Tamil:

Jio recharge plan rate increase in tamil

முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் Jio நிறுவனமானது கடந்த இரண்டு காலாண்டுகளாக ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூஸரில் (Average revenue per user – ARPU). அதாவது ஒரு பயனருக்கான சராசரி வருவாயில் சிறப்பாக கிடைக்கவில்லை.

அதனால் Jio நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதால் ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க முடிவு செய்துள்ளார். ARPU-வை அதிகரிக்க வேண்டுமென்றால் Jio நிறுவனத்திற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது.

 அதாவது தனது சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்யப்படும் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) மீது விலை உயர்வை அறிவிப்பது மட்டுமே ஆகும். 

இதனால் ஒரு வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்டோர் Jio-வை பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் ரீசார்ஜ் செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு பெரிய அளவு தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> JIO SIM வாடிக்கையாளர்களா நீங்கள் அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்

பொதுவாக இந்திய டெலிகாம் துறையை பொறுத்தவரை, எந்த நிறுவனம் முதலில் கட்டண உயர்வை அறிவிக்கப்போகிறது என்பதே “மில்லியன் டாலர் கேள்வியாக” இருக்கும்.

ஏதாவது ஒரு நிறுவனம் விலை உயர்வை அறிவித்துவிட்டால் போதும், மற்ற நிறுவனங்களும் அதை அப்படியே பின்பற்றி விலை உயர்வை அறிவிக்கும். அதன் அடிப்படையில், ஏர்டெல் (Airtel) நிறுவனமானது அதன் பேஸிக் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Basic Prepaid Recharge) ஆன ரூ.99-ஐ நீக்கி விட்டு, புதிய அடிப்படை திட்டமான ரூ.155-ஐ அறிமுகம் செய்துள்ளது.

அதனால் ரிலையன்ஸ் ஜியோவும் கூட தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வை விரைவில் அறிவிக்கும் என்கிற நிலை உருவாகி உள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Jio பயனர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement