June Month Bank Holidays in 2023
வணக்கம் நண்பர்களே..! பணம் என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். சிலர் பணமெல்லாம் முக்கியமில்லை, உணவும் நீரும் தான் முக்கியம் உயிர்வாழ்வதற்கு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த உணவையும் நீரையும் நாம் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சரி அதை விடுங்க. இது நமக்கு தெரிந்த ஓன்று தான். ஆனால் இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் Rs.2000/- நோட்டை ரத்து செய்யும் ரிசர்வ் வங்கி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போறீங்களா..?
ரிசர்வ் வங்கியானது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். அதுபோல ஒரு நபர் ஒரு நாளைக்கு 20,000 வரை தான் மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளது.
அதனால் சிலர் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். அதுபோல வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்கும் குறிப்பிட்ட வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
Google Pay -ல இப்படி ஒரு வசதியா.. இது அல்லவா நற்செய்தி |
மேலும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, ஜூன் 2023 -ல் மொத்தம் 12 வங்கி விடுமுறை நாட்கள் வருகின்றன. இந்த விடுமுறைகளில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். எனவே நீங்கள் ஜூன் மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நினைத்தால் இதை தெரிந்து கொண்டு வங்கிக்கு செல்லுங்கள்.
2023 ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்கள்:
வாங்கி விடுமுறை நாட்கள் | |
ஜூன் 04.06.2023 | ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும் |
ஜூன் 10.06.2023 | இரண்டாவது சனிக்கிழமை |
ஜூன் 11.06.2023 | ஞாயிற்றுக்கிழமை |
ஜூன் 15.06.2023 | ராஜ சங்கராந்தி என்பதால் மிசோரம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வங்கிக்கு விடுமுறை |
ஜூன் 18.06.2023 | ஞாயிற்றுக்கிழமை |
ஜூன் 20.06.2023 | ரத யாத்திரை என்பதால் ஒடிசா மாநிலத்தில் வங்கிக்கு விடுமுறை |
ஜூன் 24.06.2023 | மாதத்தின் 4 ஆவது சனிக்கிழமை |
ஜூன் 25.06.2023 | ஞாயிற்றுக்கிழமை |
ஜூன் 26.06.2023 | கர்ச்சி பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை |
ஜூன் 28.06.2023 | ஈத் அல்-அஜா காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு & காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை |
ஜூன் 29.06.2023 | ஈத் அல்-அஜா காரணமாக பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை |
ஜூன் 30.06.2023 | ரிமா ஈத் அல் அஷா காரணமாக மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும் |
வங்கி விடுமுறை நாட்கள் | Bank Holidays 2023 in Tamil
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |