கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2025.. மீண்டும் யார் யாருக்கெலாம் புதியதாக கிடைக்கும்?

Advertisement

Kalaignar Magalir Urimai Thogai Latest News in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2025.. மீண்டும் யார் யாருக்கெலாம் புதியதாக கிடைக்கும்? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. மிகவும் முக்கியமான மற்றும் பெண்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நியூஸை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதவாது தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தலின் போது தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு ஆனது மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன் படி பார்க்கையில் அதற்கு விண்ணப்பங்கள் முதலில் வரவேற்கப்பட்டு அதன் பிறகு அதில் இருந்து தகுதியான நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

தமிழக அரசிசின் முக்கியமான முதன்மை திடமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

Kalaignar Magalir Urimai Thogai Latest News Today | மீண்டும் யார் யாருக்கு கிடைக்கும்.?

Kalaignar Magalir Urimai Thogai Latest News

  • விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் எத்தனை பேர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அந்த வகையில் 1 லட்சம் பேர் வரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக சேருவார்கள் என கூறப்படுகிறது.
  • தற்போது இத்திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் பயனாளர்களாக உள்ள நிலையில் இத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தினால் இன்னும் அதிகமாக ஓரிரு லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளவைகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

யார் யாருக்கு இத்திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும்.?

  • புதிதாக திருமணம் ஆகி, புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் சேரலாம்.
  • இதுவரை கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து தற்போது  பிரிந்து தனியாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
  • முதல் முறை இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லதாதல் விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த முறை சரியான ஆவணத்தை கொடுத்து இத்திட்டத்தில் சேரலாம்.
  • இதில் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு இத்திட்டம் பயன்பெறும்.
  • 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
  • ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் பயன்பெறலாம்.

kalaignar magalir urimai thogai latest news today

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News
Advertisement