KIA-வின் EV3 மற்றும் EV4
இப்போது மக்களின் அடிப்படை தேவைகளில் காரும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கார் ஒருவரின் அந்தஸ்தாக கருதப்படுகிறது. கார்களின் விலைகளும் நமது பட்ஜெட்டில் வருமாறு பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரித்து வருகிறது. கார் வாங்க வேண்டும் என்று எண்ணும் பலருக்கும் இப்போது சந்தையில் வரத்து அதிகமாக உள்ள Electric vehicle பற்றி அதிகம் தெரிவதில்லை, டீசல், பெட்ரோல் வாகனங்களை விட இப்போது இவற்றின் வரவு அதிகரிக்கிறது. EV கார்கள் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருப்பதால் அரசாங்கமும் இந்த வாகனத்தின் மீது அதிக சலுகைகள் வழங்குகிறது. EV வாகனங்களின் உற்பத்தி தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. EV வாகனங்களில் புதிய யுத்திகளை பயன்படுத்தி ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்தியை அதிகரிக்கிறது. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனமான KIA தனது இரண்டு புதிய EV வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாருங்கள் இன்றைய பதிவில் KIA அறிமுகப்படுத்திய கார்களை பற்றி தெரிந்துகொள்ளவோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
KIA-வின் புதிய வகை கார்கள்:
அமெரிக்காவில் நடந்த LA ஆட்டோ ஷோவில் பல நிறுவனங்கள் தங்களின் புதிய EV வகை கார்களை அறிமுகப்படுத்தியது.
அதில் குறிப்பாக Kia நிறுவனம் இரண்டு வகையான வாகனங்களை அறிமுகப்படுத்தியது.
Kia நிறுவனம் காட்சிப்படுத்திய EV3 மற்றும் EV4 வாகனங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
EV3 / EV4 :

Kia சந்தையில் முதல் சிறிய SUV வகை கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
2021 – ல் LA ஆட்டோ ஷோவில் காட்டிய EV9 வகை கார்கள் இந்த வருட இறுதியில் அல்லது 2024-ல் ஜூன் மாதம் சாலையில் காணலாம் என்றும், இப்போது கட்சிப்படுத்தியுள்ள EV3 மற்றும் EV4 கார்கள் 2026-ம் சந்தையில் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
EV9:

இந்த 2 வகையான கார்களின் விலை மற்றும் செயல்திறன் போன்றவற்றின் தகவல்கள் வெளிப்படுத்தவில்லை.
kia EV9 கார்களின் விலை 90 லட்சம் முதல் தொடங்குகிறது.
இந்திய சந்தையில் EV வகையான கார்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் புதிய வகை EV கார்களின் வரத்து அதிகரிக்கும்.
இந்தியாவில் உள்ள மின்சார வாகனங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














