எதனால் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்று தெரிந்துகொள்ள இதை செய்யுங்க வெறும் 2 நிமிடம் தான்..!

Advertisement

Magalir Urimai Thogai Status Check Online  

பொதுவாக ஒவ்வொரு மாதம் மற்றும் வாரம் என வரும் போது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் வேலை பார்ப்பரவர்களுக்கு இத்தகைய முறையில் சம்பளம் அளிக்கும் முறை இருந்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியினை மற்றும் எதிர்பார்ப்பினை அளிக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களுக்கும் செப்டம்பர் மாதம் எப்போது வரும் என்றும், அதிலும் குறிப்பாக 15-ஆம் தேதி ஆனது எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் தான் அதிகமாக இருந்தது. இதற்கான காரணம் வேறு ஒன்றும் இல்லை மகளிர் உரிமை தொகை மட்டுமே. அந்த வகையில் இப்போது செப்டம்பர் மாதம் 15 தேதி ஆகியும் கூட விண்ணப்பித்த பல பெண்களுக்கு எந்த ஒரு பதிலும் தேரியாமலே உள்ளது. அதனால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா என்றும், அது எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தினை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

வீட்டுக் கடனுக்கான சிறப்பு தள்ளுபடியினை வழங்கும் SBI பேங்க்..! இந்த நியூஸ் தெரியுமா  

Kmut Tn Gov in Magalir Urimai Thogai Status:

சில வருடங்களுக்கு முன்பாக நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது சில அறிவிப்புகள் மக்களுக்காக தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார்.

அத்தகைய அறிவிப்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினையு அறிவித்து இருந்தார். மேலும் இந்த அறிவிப்பிற்கு அடுத்தகட்ட நிலையாக இந்த தொகை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் செப்டம்பர் மாதம் 15 தேதி முடிவடைந்த  பிறகும் கூட ஒரு சிலருக்கு மகளிர் தொகை என்பது வழங்கப்பட வில்லை. இவ்வாறு வழங்காமல் உள்ளவர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் உங்களுடைய விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்ட என்பதற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றால் அதற்கான காரணத்தினை நீங்கள் இந்த நிமிடமே தெரிந்துக்கொள்ளலாம்.

அதாவது https //kmut.tn.gov.in என்ற மகளிர் உரிமைத்தொகை இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலமாக உங்களுடைய விவரங்களை அதில் கொடுத்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

  1. முதலில் https //kmut.tn.gov.in இணையத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் உங்களின் விண்ணப்ப நிலையினை அறிய என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு அதில் கேட்கும் உங்களின் ஆதார் எண் (அ) ரேஷன் கார்டு எண்ணை அதில் குறிப்பிட வேண்டும்.
  4. கடைசியாக Submit என்பதை கொடுத்தால் உங்களின் விண்ணப்பம் ஆனது எந்த காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான தெரிந்து விடும்.

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை கிடைத்தவாதங்க முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement