இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா..? | Next President in Tamil

kudiyarasu thalaivar 2022

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்..? 

நண்பர்களே வணக்கம்,  சாதாரணமாக போட்டி என்றால் ஆர்வமாக போட்டியின் முடிவுக்காக காத்திருப்போம். இன்று (21.07.2022) ஜனாதிபதி யார் என்ற தேர்வுக்கான முடிவு வெளிவரும் நிலையில் அனைவரும் ஆர்வமான காத்திருப்பீர்கள். இது இந்தியாவின் 15 வது குடியரசு தலைவர் தேர்தல் ஆகும். இதுவரை ராம் நாத் கோவிந்த் குடியரசு தலைவராக பதிவில் இருந்து வந்தார். இதன் பின் 2022 ஆம் ஆண்டு குடியசு தலைவர் யார் என்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்தார்கள் என்று சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

குடியரசு தலைவர் வேட்பாளர் பெயர் 2022: 

குடியரசு தலைவர் தேர்தல் கடந்த மாதம் ஜூன் 15 முதல் வேட்பு மனு  ஜூன் 29 வரை தாக்கல் செய்யலாம். என செய்தி வெளிவந்த நிலையில் அகில இந்திய கூட்டணியில் காங்கிரசிலிருந்து யஷ்வந்த் சின்கா கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார், அதே போல் பாஜகவிலிருந்து திரௌபதி முர்மு  ஜூன் மாதம் 24 ஆம் தேதி வேட்மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் இவர்கள் இருவரும்  தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேர்தல் நடந்து முடிந்த முடிவுகளில் இன்று அறிவிப்பு வெளிவந்தது அதில் வெற்றி பெற்றது தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வெற்றிபெற்றது அவர் பெயர் திரௌபதி முர்மு ஆவார். இவர்

குடியரசு தலைவர் 2022:

throwpathi murmu in tamil

  • இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூலை 25 ஆம் நாள் பதவியேற்பு செய்வார்.

தந்தை பெயர்: பிராஞ்சி நாராயண் டுடு

பிறந்த தேதி : 20. 6. 1958

கல்வி தகுதி: இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகதில் கல்வி பயின்றார்.

பிறந்த ஊர்: ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி என்னும் இடலத்தில் பிறந்தார்.

கணவர் பெயர்: சியாம் சரண்

பிள்ளைகள்: மூன்று பிள்ளைகள்.

இப்போது இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். இவர்தான் இந்தியாவின் முதல் பழங்குடியின் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஒடிசா மாநில அரசில் நீர்ப்பாசனம் மற்றும் மின்துறையில் இளநிலை உதவியாளராக பணியைத் 1979 முதல் 1983 வரை பதவி வகித்தார்.

ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியை 1994-ம் ஆண்டு சேர்ந்தார். அதன் பின் 1997-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்ததோடு ராய்ரங்பூர் கவுன்சிலராகவும் அரசியலில் தனது என்ட்ரியை பதிவு செய்து வந்தார்.

2000, 2009 ஆண்டு இருமுறை ராய்ரங்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போக்குவரத்து மற்றும் வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் கால் பதித்து சிறப்பாக பணியாற்றிவந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு ஆளுநராக பதவி வகித்தார். அதன் பின் வரும் ஜூன் 21ஆம் நாள் 2022 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின் அவர் ஜூன் 25 ஆம் நாள் பதவியேற்க உள்ளார்.

இந்திய குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல் 2022
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil