LIC யின் பாலிசிதாரர்களுக்கு ஒரு அறிவிப்பு..! மார்ச் 31 கடைசி தேதி..!

Advertisement

Pension Scheme for Senior Citizens Details in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பல செய்திகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் LIC-யின் பல வகையான திட்டங்களை பற்றி பார்த்து வருகிறோம். எனவே இன்றைய பதிவில் LIC- யில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் திட்டத்தில் முதலீடு மற்றும் கடைசி தேதி போன்றவற்றின் விவரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். LIC- யின் பல வகையான திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா (PMVVY) திட்டம். இத்திட்டம் முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இதில் முதலீடு செய்ய காலக்கெடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இவற்றின் விரிவான தகவல்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு..!

பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா (PMVVY) திட்டம்:

முதியோர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு 2017 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா (PMVVY) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதியோர்கள் அவர்களின் ஓய்வுக்கு பிந்தைய செலவுகளை  ஈடுக்கட்ட இத்திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள முதியோர்கள் முதலீடு செய்து ஓய்வூதியத்தை பெறலாம்.

முதலீடு செய்ய கடைசி தேதி:

பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா (PMVVY) திட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

வயது தகுதி:

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வூதியத்தை பெறலாம்.

ஓய்வூதிய விவரம்:

இத்திட்டத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு 10 வருடத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது 10 வருடத்தில் ஒவ்வொரு மாதமும் 7.4 முதல் 7.66 சதவீதம் வரை உத்திரவாத ஓய்வூதியத்தை பெறலாம்.

மேலும் முதலீடு செய்யப்பட்ட தொகையானது பத்து ஆண்டுகளுக்கு பிறகு பாலிசிதார்களுக்கு திருப்பி கொடுக்கப்படும்.

ஓய்வூதியத்தின் கால அளவு:

முதலீடு செய்வபர்கள் நிர்ணயித்த கால அளவுகளின் படி ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. அதாவது, மாதந்தோறும், 3 மாதத்திற்கு ஒருமுறை, 6 மாதத்திற்கு ஒருமுறை, ஆண்டுதோறும் போன்ற கால இடைவெளியின்படி ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ இனி கேஸ் சிலிண்டரை மானியத்தில் 1 வருடம் வாங்கிக்கொள்ளலாம்..! மக்களுக்கு மேலும் ஹாப்பி நியூஸ்..!

முதலீட்டு தொகை அளவு:

இத்திட்டத்தில் முதலீட்டு தொகையாக 7.5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement