மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு LIC-ன் சிறப்பு சலுகை

Advertisement

LIC Special Offer for Migjam Storm Victims!

தமிழகத்தில் நடந்த மிக்ஜாம் புயல் பாதிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த புயலால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிறைய மீட்டுப்புக்குழுக்கள், பேரிடர் உதவிகளை கொண்டு கொஞ்சம் கொஞ்சம் சென்னை தன்னுடைய இயல்பு நிலைக்கு வந்துள்ளது, இருப்பினும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு ஏராளம். இந்த பாதிப்புகளை ஈடுகட்ட நிறைய பேர் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய். 6,000 அரசின் உதவியைப் பெற்றுள்ளனர். நிறைய நபர்கள் முன்வந்து புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுயுள்ளனர். கால்நடைகள் மற்றும் பயிர்களை இழந்த நபர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) மிக்ஜாம் சூறாவளி எல்ஐசி சந்தாதாரர்களுக்கு சிறப்பு நன்மைகளை விளைவிக்கும் என்று அறிவித்துள்ளது.

2024-ல் லிட்டருக்கு 10 ரூபாய் பெட்ரோல்-டீசல் விலை குறையுதா?=>

அது என்னவென்று தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

LIC-ன் சிறப்பு சலுகை | LIC new offer for Migjam storm victims

சென்னையில் இம்மாதம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி ஒரு புது சலுகையை அறிவித்துள்ளது. 

  • அதாவது காலக்கெடுவிற்குள் பிரீமியத்தை செலுத்த முடியாத நபர்களுக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படாது.
  • இறப்பு பாலிசி வைத்திருப்பவர்களுக்கு, எளிய இறப்பு ஆதாரம் மற்றும் இறப்புரிமைக்கான விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமனது.
  • கூடுதலாக, போலீஸ் பதிவு, பிரேத பரிசோதனை அறிக்கை போன்றவை தேவையில்லை.
  • பாலிசிதாரர்கள் 044 – 28611642/ 28611912/ 25331914/ 25331915 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இந்த சலுகைகலை பெறலாம்.

2024 பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் டோக்கன் தேதி!

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலினை எல்.ஐ.சி., யின் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த மனசு தான் சார் கடவுள், சில மனிதர்களின் நல்ல உள்ளம் இது போல் பேரிடர் வந்தால் தான் வெளியே தெரிகிறது. இந்த சலுகையானது எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement