மத்திய அரசின் புதிய முடிவால் அதிரடியாக குறையும் LPG கேஸ் சிலிண்டரின் விலை..!

Advertisement

சிலிண்டர் விலை எவ்வளவு

அன்றாட நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் அத்தியாவசியமான பொருட்கள் என்று சில இருக்கும். அந்த வகையில் பால், காய்கறி, மருந்துகள்,மளிகை பொருட்கள் என இவை அனைத்தும் நமக்கு அதிகமாக தேவைப்படக்கூடிய ஒன்று. இத்தகைய பொருட்கள் அனைத்தும் தினமும் தேவைப்படுவது போல கேஸ் சிலிண்டர் என்பது மாதம் 1 நமக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆகையால் கேஸ் சிலிண்டரும் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாக தான் கருதப்படுகிறது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றைய காலத்தில் உள்ள பல பெண்கள் விறகு அடுப்பிற்கு பதிலாக கேஸ் அடுப்பை உபயோகப்படுத்துகிறார்கள். இவ்வாறு கேஸ் சிலிண்டர் வாங்கி பயன்படுத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது கேஸ் சிலிண்டரின் விலையினை குறைத்து உள்ளது. எனவே அதனை பற்றிய முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க..!

ஏர்டெல்லில் 455 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா 

LPG Gas Cylinder Price:

நம்முடைய வீடுகளில் மூன்று வேலையும் உணவு சமைக்க வேண்டும் என்றால் அதற்கு அடுப்பு என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் அனைவரும் கேஸ் அடுப்பினை பயன்படுத்தி வருகிறார்கள்.

கேஸ் அடுப்பு என்பது பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்தாலும் கூட சிலிண்டரின் விலை என்பது அதிரடி விலையில் இருப்பதால் இது மக்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது.

இவற்றை அடிப்படையாக வைத்தும், பணவீக்கத்தினை சரி செய்யும் விதமாக மத்திய அரசு ஆனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் LPG கேஸ் சிலிண்டரின் விலையினை 200 ரூபாய் குறைப்பதற்கான அறிவிப்பினை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உஜ்வாலா திட்டத்தில் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 200 ரூபாய் கூடுதல் மானியம் வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் 14.2 கிலோ எடை வீட்டு பயன்பாட்டிற்கான LPG கேஸ் சிலிண்டரின் விலையில் இருந்து 200 ரூபாய் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவித்த குட் நியூஸ்..! என்னனு தெரியாத

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement