12th Result வந்து 15 நாட்களிலே இலவச பட்டப்படிப்பு..! மாணவர்களே இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாதா..!

Advertisement

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு

ஒரு குழந்தையின் படிப்ப ஆனது 6 வயதில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது எல்லாம் 3 வயதில் இருந்து ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பமாகிறது. என்ன தான் குழந்தைகள் 3 வயதில் இருந்து படித்தாலும் கூட 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு இந்த மூன்று வகுப்புகளும் மிகவும் முக்கியமான வகுப்புகளாக உள்ளது. ஏனென்றால் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சரியாக எழுதினால் மட்டுமே அடுத்து என்ன பிரிவு எடுத்து படிக்கலாம் என்று முடிவு செய்ய முடியும். அதுபோல 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிலையாக என்ன செய்வது என்று யோசிக்க முடியும். அந்த வகையில் இப்போது பெரும்பாலான மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்தபடியாக அதற்கான Result வந்துவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. ஆகையால் அது என்ன நியூஸ் என்ற அறிவிப்பினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில் கல்வித்துறை எடுத்த அதிரடி உத்தரவு.. 

சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச படிப்பு:

இப்போது பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிருக்கிறது. இத்தகைய பொதுத்தேர்வினை பெரும்பலான மாணவர்கள் எழுதி வருகின்றனர். பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகிவிடும்.

அதன்  பிறகு அதில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அவர் அவருக்கான விருப்பமான பிரிவினை எடுத்து படிக்க வேண்டும் என்று முடி செய்வார்கள். இப்படி இருக்கும் சூழலில் இப்போது ஒரு புதிய அறிவிப்பை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதுஎன்னவென்றால் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவச பட்டப்படிப்பு படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரசு உதவி பெரும் கல்லூரி மற்றும் சுய நிதிகல்லூரியில் இளங்கலை படிப்பு படிக்க 2022-2023 ஆண்டில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற குறிப்பிட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

  1. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள்
  2. முதல் பட்டதாரி மாணவர்கள்
  3. விதவை தாய் பிள்ளைகள்
  4. திருங்கைகள்

மேலே சொல்லப்பட்டுள்ள மாணவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

மேல் குறிப்பிட்டுள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வந்து 15 நாட்களுக்குள் https //www.unom.ac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மகளிருக்கு மட்டுமில்லாமல் மற்ற நபர்களுக்கும் இலவசம்.. அது யாருக்கு என்று தெரிந்துகொள்ளுங்கள்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement