அக்டோபர் மாத மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் இந்த நியூஸ் தெரியாதா..!

Advertisement

Magalir Urimai Thogai for October Month in Tamil

நண்பர்கள் அனைவரும் வணக்கம்..! இன்றைய பதிவில் மிகவும் முக்கியமான மற்றும் பெண்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நியூஸை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதவாது தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தலின் போது தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு ஆனது மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன் படி பார்க்கையில் அதற்கு விண்ணப்பங்கள் முதலில் வரவேற்கப்பட்டு அதன் பிறகு அதில் இருந்து தகுதியான நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் முதல்கட்ட நிலையாக போன மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு பணமும் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான தொகை எப்போது கிடைக்கும் என்று சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆகையால் அதனை பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1000:

மகளிர் உரிமைத்தொகையின் முதல் கட்டமாக போன மாதம் 6 கோடியே லட்சத்து 52 ஆயிரத்து 198 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். மேலும் இவை இல்லாமல் மற்ற சிலருக்கு விண்ணப்பங்கள் ஆனது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வாறு நிராகரிப்பட்ட விண்ணப்பங்களை மேலும் புதியதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தது. மேலும் அதற்கான ஒரு கால அவகாசமும் இதில் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது அக்டோபர் மாதம் பிறந்துவிட்ட காரணத்தினால் அதற்கான மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி ஆனது அனைவரிடத்திலும் இருந்தது.

இத்தகைய கேள்விக்கான ஒரு பதிலாக தமிழக அரசு ஒவ்வொரு மாதம் 15-ஆம் தேதியும் உங்களது கணக்குகளுக்கு மகளிர் உரிமைத்தொகை பணம் ஆனது அனுப்பி வைக்கப்படும் என்றும், அக்டோபர் மாதத்திற்கான தொகை 15-ஆம் தேதி கிடைத்து விடும் என்று கூறியுள்ளது.

ஜியோ சிம் யூசர்கள் கம்மி விலையில தினசரி 2 GB டேட்டாவை 365 நாட்களும் பெறலாமா செம நியூஸ் ஆச்சே

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement