மகளிர் உரிமை தொகை பட்ஜெட் 2025
இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட்டில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பட்ஜெட்டையும், உரிமை தொகை பெரும் பட்டியல்களையும் வெளியிட்டது. இதில் பல்வேறு மாற்றங்களையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
குடும்பத்தில் உள்ள பெண்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த தொகையை வைத்து நிறைய குடும்பங்களை தங்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். மகளிர் உரிமை தொகை திட்டம் பல்வேறு குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக கொண்டுவந்த மாற்றங்கள் என்ன என்று இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க….
மகளிர் உரிமை தொகை :
மகளிர் உரிமைத் தொகை என்பது, தமிழ்நாடு அரசால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 உரிமைத் தொகையாக வழங்கும் ஒரு திட்டமாகும். இதன் நோக்கம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஆகும். மகளிர் உரிமை தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் விண்ணம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கும் தமிழக அரசு வாய்பளித்துள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பம் மாற்றுக்கப்பட்டிருந்தால் அதற்கான முழு நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் எஸ் எம் மெசஜ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு :
விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுந்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. மேல்முறையியீடு செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதி மகளிர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
மகளிர் உரிமை தொகை பெற தகுதியற்றவர்கள் யார் என்று தெரியுமா?
எப்படி மேல் முறையீடு செய்வது?
மேல்முறையீடு மனுக்கள் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். பொதுமக்களின் மேல்முறையீடு வசதிக்காக இ சேவைமையங்களிலும் மேல்முறையீடு செய்யலாம்.
2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பட்ஜெட் 13,807 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காத இல்லத்தரசிகள் புதிதாக விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தற்போது மகளிர் உரிமைத்தொகையை 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேர் பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
| இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |














