ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை கிடைத்தவாதங்க முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

magalir urimai thogai rejected in tamilnadu in tamil

Magalir Urimai Thogai Rejected in Tamilnadu  

தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை ஆனது மக்களிடம் பெரும் வரவேற்பினையும், அதிகப்படியான எதிர்பார்ப்பினையும் கொண்டு இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த தொகை எப்போது வழங்கப்படும் என்ற தேதிக்கான ஆர்வம் நிறைந்த இருக்கும் பொழுது செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த தொகை வழங்கப்படும் என்றும் அதற்கு சில தகுதிகள் மற்றும் அடிப்படை விதிகள் உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பிற்கு பின்பாக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இத்தகைய நிலையில் விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்ட தற்போது ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகையும் வழங்கப்பட்டது. ஆனால் இத்தகைய தொகை ஆனது விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் வந்து சேர வில்லை. அதனால் இன்றைய பதிவில் உரிமை தொகை வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியதை பற்றி தான் தெளிவாக பார்க்கப்போகிறோம்.

வீட்டுக் கடனுக்கான சிறப்பு தள்ளுபடியினை வழங்கும் SBI பேங்க்..! இந்த நியூஸ் தெரியுமா  

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்:

இந்த மகளிர் உரிமைத்தொகைக்கு என்று மொத்தமாக எண்ணற்ற விண்ணப்பங்கள் வந்த நிலையில் அவற்றினை சரியாக சோதனை செய்த பிறகு அதில் இருந்து 1.065 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இந்த தொகையும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று அவர் அவருடைய கணக்கில் ரூ.1000-மும் வந்து சேர்ந்தன.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் சரியான தகுயினை பெறாத நபர்களுக்கு இது வரையிலும் தெரியாமல் இருக்கும் நிலையில் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு எதனால் பணம் வரவில்லை என்பதற்கான SMS ஆனது வரும்.

அத்தகைய SMS வந்த பிறகு அடுத்த 30 நாட்களுள் இதற்கான மேல் முறையீட்டினையும் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல்  இத்தகைய மேல் முறையீட்டிற்கு பிறகு மீண்டும் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு விசாரணை அலுவலர் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய குட் நியூஸ்  யாரெல்லாம் கடன் வாங்கி இருக்கீங்க 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil