Magalir Urimai Thogai Thittam
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளதார். இத்திட்டம், மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். குடும்ப அட்டை உள்ள குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் திட்டமாகும். இருப்பினும், இத்திட்டத்தில் பயன்பெற ஒரு சில தகுதிகள் உள்ளன. அவற்றை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து, தகுதியானோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர தகுதியானவர்கள்:

21 வயது பூர்த்தியடைந்த பயனாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
ஆண்டு குடும்ப வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள பயனாளர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
குடும்ப தலைவி, பெண் அரசு ஊழியராகவும், பெண் MLA -ஆகவும் மற்றும் பெண் MP- ஆகவும் இருக்க கூடாது.
நடைமுறைக்கு வரும் நாள்:
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செம்ப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளதார்.
இத்திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டம் குறித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளின் மத்தியில் பேசியுள்ளார். அப்போது அவர், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இல்லாமல், இத்திட்டத்தில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல், இத்திட்டத்தை எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பிக்க செய்லபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தங்கம் விலை இப்படி ஏறிக்கிட்டே போனா எல்லாரும் கழுத்தில கவரின் தான் போட்டுக்கமுடியும்
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














